• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

விமானம் – விமர்சனம்

by Tamil2daynews
June 10, 2023
in விமர்சனம்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விமானம் – விமர்சனம்

பெற்றவர்களின் கடமை பெற்றதோடு இல்லாமல் பெற்ற பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றும் ஒரு தந்தையின் கதை தான் இந்த விமானம்.

சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளி அப்பா சமுத்திரக்கனி. அம்மாவை இழந்த அவரது நான்காவது படிக்கும் மகனாக நடித்துள்ள துருவனுக்கு விமானம் என்றால் கொள்ளைப் பிரியம்.

சாப்பிடாமல், தூங்காமல் விமான நிலைய காம்பவுண்டில் நின்றபடி விமானங்கள் பறப்பதை பார்த்து ரசிக்கும் துருவன், விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என எக்கச்சக்க கனவுகளுடன் வலம் வர, தன் மகனின் ஆசையை நிறைவேற்ற சமுத்திரக்கனி எந்த எல்லை வரை செல்கிறார்,  அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கதை!
Samuthirakani & Meera Jasmine in 'Vimanam': Heartwarming glimpse video is here! - Tamil News - IndiaGlitz.comபாசக்கார ஏழை அப்பாவாக சமுத்திரக்கனி நடிப்பி மிளிர்கிறார். கட்டணக் கழிப்பிடத் தொழிலை நேர்மையாக செய்வது, மாற்றுத் திறனாளிகள் வாகனத்தில் மகனை வாஞ்சையாக அழைத்துச் செல்வது, மகனுக்காக துடிதுடிப்பது என குடும்பத்துக்காக நாள்தோறும் கஷ்டப்படும் ஏழை தந்தைகளை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

அப்பாவின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு படிப்பில் சுட்டியாக விமானக் காதலாராக மாஸ்டர் துருவன். கொஞ்சம் செண்டெமெண்ட் மேலோங்கி நடித்தாலும் கதைக்கு வேண்டியதை செய்திருக்கிறார். விமானத்தை பார்த்து ரசிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.

அப்பா – மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படத்தில் அனுசுயா கதாபாத்திரமும் கவர்ச்சியும் தேவையற்ற திணிப்பு. மொட்டை ராஜேந்திரன் – ராகுல் ராமகிருஷ்ணா இணைந்து செய்யும் காமெடி சிரிப்புக்கு பதிலாக கடுப்பையும், கோபத்தையே வரவழைக்கிறது. சரண் அர்ஜூனின் இசை சலிப்பு தட்டுகிறது.

குறிப்பாக பின்னணி இசை சீரியல் பார்க்கும் உணர்வைத் தந்து வேதனைப்படுத்துகிறது. கௌரவக் கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் படத்தில் வந்து செல்கிறார்.
Samuthirakani & Meera Jasmine in 'Vimanam': Heartwarming glimpse video is here! - Tamil News - IndiaGlitz.comசாதிய, வர்க்கரீதியாக, உடல்ரீதியாக என பலவிதங்களில் ஒடுக்கப்படும் மாற்றுத் திறனாளி சமுத்திரக்கனி அனுபவிக்கும் கஷ்டங்களை திரையில் காண்பித்தது பாராட்டுக்குரியது. ஆனால் உலகின் அத்தனை பிரச்னைகளையும் சமுத்திரக்கனியின் தலையில் கட்டி சோகத்தில் நம்மை முக்கி எடுக்கிறார்கள். படம் பார்க்கும் பார்வையாளர்களை அழவைக்காமல் விடுவதில்லை என இயக்குநர் சபதம் எடுத்துவிட்டு வந்திருப்பார் போலும்… கிளாசிக் சோக தமிழ் சினிமாவான துலாபாரத்தை விட சோகம் ததும்ப படம் செல்கிறது!

படத்தின் அடுத்தடுத்து வரும் காட்சிகள் நாம் ஏற்கனவே யூகித்தபடி நகர்வது சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றது.

இருந்தாலும் இக்கதையில் இவ்வளவு சோகம் தேவையா என்ற கேள்வி நம் மனதிற்குள் எழுவது உண்மை.

இந்த விமானம் பொம்மையாக பார்ப்பதற்கு மட்டுமே அழகு.மேலே பறப்பதற்கு அல்ல
Previous Post

‘டக்கர்’ விமர்சனம்

Next Post

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என இன்று திரையரங்குகளில் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாகி உள்ளது!

Next Post

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என இன்று திரையரங்குகளில் 'டக்கர்' திரைப்படம் வெளியாகி உள்ளது!

Popular News

  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.