ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘டக்கர்’ விமர்சனம்

by Tamil2daynews
June 10, 2023
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டக்கர்’ விமர்சனம்

ரேசில் ஜெயிக்காத குதிரைக்கு என்னதான் 777  நம்பர் வச்சி ஓட விட்டாலும் அந்த குதிரை எவ்வளவு ஓட முடியுமோ அவ்வளவு தான் ஓடும்.இந்த ‘டக்கர்’ படமும் அப்படித்தான்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில்   நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக தியேட்டரில் வெளியாகியுள்ளது.
Takkar trailer is here: Siddharth is on the run to make money- Cinema express
பணக்காரனாக ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்) . ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்து அங்கு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. எல்லா  வேலைகளையும்  விட்டு கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் காட்டப்படுகிறது. சந்தர்ப்ப சூழலால் இந்த ஏரியாவுக்கு வரும் சித்தார்த் அங்கிருந்த கார் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அந்த காரில் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.

ஹீரோ, ஹீரோயின் , வில்லன் குரூப் என ஒவ்வொருவராக அறிமுகப்பத்தப்படுவதற்குள் படத்தின் முதல்பாதி முடிந்து விடுகிறது.

இரண்டாம் பாதியிலாவது கொஞ்சம் விறுவிறுப்பான ஒரு ரோட் மூவி பார்க்கலாம் என்று எதிர்பார்த்தால் மிக நிதானமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக். வில்லன்களின் கூட்டத்தில் இருக்கும் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றுல் சில பாடல்கள் மட்டுமே படத்திற்கு ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது .மற்றபடி இத்தனைக் கால காத்திருப்புக்கு பின் வெளியாகும் சித்தார்த்தின் டக்கர் படத்தில் புதிதாக எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை.
Siddharth Takkar officially announced to release on April 17 | Galatta

பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஏழை – பணக்காரன் வேற்றுமை எல்லா காலத்திலும் ஏற்புடையதாக இருக்கும் ஒரு கதைக்களம். வர்க்க முரண் தொடர்பான காட்சிகள் வெகுஜனத்தை ஒரு படத்திற்குள் ஈர்க்க செய்யும் மிக எளிய வழியாகும் . ஏற்கனவே இந்த வரிசையில் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் டக்கர் படமும் சேர்ந்துள்ளது. இதில் வெகு சிலப் படங்களே  தனித்து நிற்கும் நிலையில் டக்கர் அந்த வகையா என்றால் கேள்விக்குறி தான்..!

படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் ரேஸியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் சித்தார்த் நடிக்கத் தேர்வு செய்யும் கதைகள் பழசாக இருக்கிறதா இல்லை ஒவ்வொரு படத்தையும் எடுத்து அது வெளியாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அந்த கதைகள் பழசாகிவிடுகின்றதா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை பார்க்கும்போது ரன் போன்ற படங்கள் நினைவுக்கு வருவதை நம்மால் மறுக்கவே முடியாது இதையெல்லாம் தாண்டி இந்த படம் ஓகே அப்படின்னு நம்ம சொன்னா அதுக்கு ஒரே காரணம் கதாநாயகியோட அழகுதான்.

கேமரா சும்மா அப்படி வச்சு எடுத்திருக்காங்க கதாநாயகி ஓட அழக. அப்படியே அள்ளிட்டு வந்திருக்காங்க.

ஆக மொத்தம் ‘டக்கர்’ கொஞ்சம் ‘மக்கர்’ தான்.
Previous Post

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

Next Post

விமானம் – விமர்சனம்

Next Post

விமானம் - விமர்சனம்

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!