• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

by Tamil2daynews
August 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

 

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார். சரியான கதைத் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம், அவர் தனது சினிமா பயணத்தில் சரியான கிராஃபில் வளர்ந்து வருகிறார். இப்போது இயக்குநர் சுசி கணேசனின் முன்னாள் அசோசியேட்டாக இருந்தவரும் இந்தப் படம் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் மையக்கதை பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட  ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.
படத்தின் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி மேலும் அவர் கூறுகையில், “கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். . ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில்  பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள் இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.
தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம்: ராஜசேகர்,
தயாரிப்பு: ரஞ்சனி,
இசை: ஜோஹன் ஷெவனேஷ்,
ஒளிப்பதிவு: இளையராஜா வி,
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
கலை: டி.என். கபிலன், ஸ்டண்ட்ஸ்: ‘பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல்,
நடனம்: லீலாவதி,
ஆடை வடிவமைப்பு: ஏ. சுபிகா,
ஒலி வடிவமைப்பு & ஒலிக்கலவை: லக்ஷ்மி நாராயணன் ஏ.எஸ்.,
VFX: Hocus Pocus,
படங்கள்: எஸ் மோகன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா D’One,
பப்ளிசிட்டி டிசைன்: Zoe Studios,
நிர்வாக மேலாளர்: பி தண்டபாணி,
லைன் புரொடியூசர்: சேதுராமன்

Previous Post

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது!

Next Post

‘ராணுவன்’ – இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!

Next Post

‘ராணுவன்’ - இந்திய ராணுவத்திற்கு ஒரு இசை அஞ்சலி!

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.