• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

by Tamil2daynews
August 5, 2023
in சினிமா செய்திகள்
0
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’டை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ‘ரசவாதி’ படம் மூலம் எஸ்.எஸ். தமன் இணைந்து இசையமைக்கிறார்.
சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வி.ஜே. சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை  கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மற்ற தொழில்நுட்பக் குழுவை சேர்ந்தவர்கள் சிவராஜ் (கலை), சேது (சவுண்ட் எஃபெக்ட்ஸ்), எஸ் பிரேம் (நிர்வாகத் தயாரிப்பாளர்), யுகபாரதி (பாடல் வரிகள்), தபஸ் நாயக் (சவுண்ட் மிக்ஸிங்), எம்.எஸ்.ஜெய சுதா (உரையாடல் பதிவாளர்), ஆக்‌ஷன் பிரகாஷ் (சண்டைப் பயிற்சி), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), ஆனந்த் (Stills), பெருமாள் செல்வம் மற்றும் மினுசித்ராங்கனி. ஜே (ஆடைகள்).

இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ’ரசவாதி’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

DNA Mechanic Company Producer Santhakumar has produced #Rasavathi
Previous Post

சான்றிதழ் – விமர்சனம்

Next Post

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

Next Post

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன் விருது’க்கான புதிய சின்னத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.