• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம், 52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் 10 ஆம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் !! இன்னும் ஒரு மாதத்தில் திரைக்கு வருகிறது ஜவான் !!

by Tamil2daynews
August 10, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம்,  52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின்  10 ஆம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள்  !!   இன்னும் ஒரு மாதத்தில் திரைக்கு வருகிறது ஜவான் !!

 

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கான் யுனிவர்ஸ், ஜவான் திரைக்கு வரும் வரை,  52 நகரங்களில் ஒரு மாதத்திற்கு  சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்புத் திரையிடலை நடத்த உள்ளது.

SRK யுனிவர்ஸ் ஜவான் விளம்பரப் பிரச்சாரத்தை பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது, இதன் ஆரம்பமாக, சென்னை எக்ஸ்பிரஸ் திரையிடலை 52 நகரங்களில் ஏற்பாடு செய்கிறது!

கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஜவான்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான ‘வந்த எடம்’ பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வருவதால், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமான SRK யுனிவர்ஸ், இரண்டு பெரிய மைல்கற்களைக் கொண்டாட ஒரு தனித்துவமான விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது – சென்னை எக்ஸ்பிரஸின் 10 ஆண்டு கால வெற்றி மற்றும் ஜவான் ரிலீஸுக்கு ஒரு மாதம் நிலையில், #10YearsOfChennaiExpress மற்றும் #1MonthToJawan என்ற ஹேஷ்டேக்குகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறது . SRK யுனிவர்ஸ் SRK படங்களின் பிரமாண்டமான விளம்பரங்களுக்காக புகழ்பெற்றது, ஜவான் திரைப்படமும் இதில் விதிவிலக்கல்ல. இந்த நேரத்தில், அவர்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் திரைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 9 ஆம் தேதி 52 க்கும் மேற்பட்ட நகரங்களில் பிளாக்பஸ்டர் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்பட சிறப்பு காட்சிகளுடன்  10 ஆண்டு நிறைவை நினைவுகூறவுள்ளது ஷாருக் மற்றும் தீபிகா ரசிகர்களுக்கு இது மிக மகிழ்ச்சியான தருணம், ரசிகர்கள் தவறவிடக்கூடாத கொண்டாட்டம்.

வெகு சுவாரஸ்யம் என்னவெனில், ஜவானின் முதல் பாடலான வந்த எடம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஜவான் இடையேயான வலுவான தொடர்பான,  லுங்கி ட்ரெண்டை ரசிகர்கள் இணையத்தில் முன்னணியில் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பாடலில் 1000க்கும் மேற்பட்ட பின்னணி நடனக் கலைஞர்கள் லுங்கி அணிந்திருந்ததாகத் தெரிகிறது. இதனுடன் சேர்த்து, சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து ‘1234 கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ பாடலில் ஷாருக்கானுடன் இணைந்த பிரியாமணியையும் இந்தப் பாடல் மீண்டும் கொண்டுவருகிறது. இந்த தொடர்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாட்னா, பத்ரௌனா, சோலாப்பூர், மாலேகான், கோட்டா, ராஜ்கோட், ஜல்கான், நாக்பூர், துப்ரி, வதோதரா, உதய்பூர், சாங்லி, சப்ரா, பீகார், டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சித்தோர்கர், வாரங்கல், அவுரங்காபாத், நாக்டா, ஜோத்பூர், துலே, பெங்களூரு, ஹைதராபாத், பெர்ஹாம்பூர், அகமதாபாத், மும்பை, சிகார், புனே, நாந்தேட், போபால், வடக்கு லக்கிம்பூர், சிலிகுரி, சென்னை, லத்தூர், காஷிபூர், பீட், பீதானா (MH), குவஹாத்தி, சிச்சார், வாரணாசி, சந்திரபூர், பர்த்வான், ரத்னகிரி, புவனேஸ்வர், இந்தூர், திரிபுரா  உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் சென்னை எக்ஸ்பிரஸை திரையிட ரசிகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

 ஷாருக்கான் இந்தியா மட்டுமல்லாது  உலகம் முழுக்க  மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார், அவருக்காக ரசிகர் மன்றம் ஒரு திரையிடலை ஏற்பாடு செய்வது இது முதல் முறை அல்ல; கடந்த ஆண்டு ஷாருக்கானின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றான ஓம் சாந்தி ஓம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பதான் ரிலீஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பும் அப்படத்தை திரையிட ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் மூலமாக #15YearsOfOmShantiOm கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

Next Post

‘ஜெயிலர்’ – விமர்சனம்

Next Post

'ஜெயிலர்' - விமர்சனம்

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.