• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஜெயிலர்’ – விமர்சனம்

by Tamil2daynews
August 11, 2023
in விமர்சனம்
0
0
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஜெயிலர்’ – விமர்சனம் 

 

முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற தோல்வி படம் தந்த இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜெயிலர்’.

முதல்ல சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி..!

ஏன் அது ரஜினிகாந்த் கிட்டயே இருக்குன்னு கேள்வி கேட்கிற எல்லோருக்குமே இந்த படத்துல அருமையான விடை கொடுத்திருக்கிறார்  ரஜினிகாந்த் (வயது-73)..

நேர்மையான ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்று வயது முதிர்ந்து பேரப்பிள்ளையோடு விளையாடுதல் வீட்டுக்கு காய்கறி வாங்குதல் என அப்பிராணியாய் வாழும் ஓய்வுபெற்ற காவல்துறை சிறைத்துறை அதிகாரி நேர்மையான தன் பிள்ளைக்கு ஆபத்து வந்ததும் ரத்த ருசி கண்ட ‘டைகர்’ ஆக மாறி கோதாவில் இறங்கும், ஏழு கடல் ஏழு மலை தாண்டிய மந்திரக் கூண்டில் கிளியின் உயிர் எடுக்கும் கதையாக கிரீடம் எடுக்கும் கதை. அதை தன் வழக்கமான பாணி டார்க் ஹ்யூமர், ஆக்‌ஷன், எமோஷன் எல்லாம் கலந்து அதற்குள் ரஜினியை கனகச்சிதமாக பொருத்தி நெல்சன் செய்திருக்கும் அழகான வீச்சு ‘ஜெயிலர்’.
Jailer Advance Booking: Tickets For Rajinikanth's Upcoming Film Priced At Rs 1400 For Even 6 AM Showsஎஸ்பிபி குரலில் பாடல் ஆயிரம் பேர் சுற்றி ஆடல் என ‘என்ட்ரி சாங்’, காலை உயர்த்தி சுற்றினால் கீழே சுழலும் புயல்,இளம் ஹீரோயினோடு டூயட், ‘லல்லல் லல்லல்லா…’ என உற்சாகமாக துள்ளி ஓடுதல் என வழக்கமான ரஜினியிஸங்களைத் துறந்து விட்டு வயதுக்கேற்ற பாத்திரத்தில் நிறைய உடல் மொழி காட்டும் ரஜினிக்கு ஒரு பூச்செண்டு. சாதாரணமாகத் துவங்கும் படத்தில் சாதாரணமாக வந்து இணைந்து கொள்கிறார் ரஜினி. அதன் பிறகு மொத்த படமும் அவரே.

‘சின்ன டைனோசர்தான் பேசறதே!’ தொடங்கி படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகள் பல உண்டு. தளபதி, கபாலி போல ரஜினிக்கு நிறைய தெளிவான முகபாவங்கள் கொண்ட படம்.

படத்தில் பல இடங்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து.

ரஜினிக்கு அடுத்த படியாக படத்தை ஆக்கிரமிப்பவர் அந்த மலையாள மொழி பேசும் வில்லன் விநாயகன். ஆசிட் தொட்டியோ, ஆர்பரிக்கும் வில்லத்தனமோ, அப்படியே பத்து ரூபாய் பிச்சை எடுப்பதோ அனைத்திலும் அள்ளுகிறார், ரத்தம் தெறிக்க தெறிக்க.

ரஜினி ஃப்ளாஷ் பேக் நன்று.  வயதும் சோர்வும் தெரிகிறது என்றாலும் ரஜினிக்கு 73 வயது என்பது நம்பும்படி இல்லை.
70% of Jailer shoot completed?- Cinema expressசாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாறும் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை திரைப்படம் எங்குமே தொய்வடையவில்லை,”
நடிகர் ரஜினிகாந்த் ‘எந்தப் படங்களிலும் இல்லாத வகையில் தனது இமேஜ் குறித்துக் கவலைப்படாமல் நடித்துள்ளார்.

மேலும், யோகி பாபு அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ரஜினியை போல் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே

அனிருத் பாடலிலும், பின்ணணியிலும் பட்டையைக் கிளப்புகிறார்.

இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் வரும் காட்சியில் அனல் பறக்கின்றது திரையில்.

கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் வரும் காட்சியில் தியேட்டரின் விசில் சத்தமும் அந்த மாஸான காட்சி இன்னமும் நம் கண் முன்னே நிற்கின்றது.
No special and early morning shows for Jailer in Tamil Nadu - TrackTollywoodமலையாள நடிகர் மோகன்லால் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து வசனம் பேசும் அந்த காட்சி அற்புதம் .அதிலும் NH47ல் கண்டெய்னர் உடன்  நடந்து வரும் அந்த நடை பின்னி எடுக்கிறார் மோகன்லால்.

 கடைசி 45 நிமிடத்தில் பரபரவென்று பற்றிக் கொள்கிறது. ‘சிறையதிகாரி நாட்டின் கேங்ஸ்டர்களோடு கூட்டணியில் இருப்பாரா?’ போன்ற லாஜிக் கேள்விகள் வரவே செய்கின்றன.  சுனில் – வைபவ் – தமன்னா காட்சிகளை நறுக்கினால் படம் வேகமெடுக்கும் என்ற எண்ணம் வரவே செய்கிறது. திரையிலிருந்து நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு படத்தில் ரத்தம்.

நெல்சன் தானும் தப்பித்து படத்தையும் காப்பாற்றி விட்டார். படம் முழுக்க திரை முழுக்க ரஜினி.

ஜெயிலர்
ஜெயிலர்
ஜெயிலர்

எங்கும் இதே குரல், மக்கள் மனதில் என்றும் நீங்காது இந்த ஜெயிலர்.

                         விமர்சகர்
                             சரண்
Previous Post

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம், 52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் 10 ஆம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் !! இன்னும் ஒரு மாதத்தில் திரைக்கு வருகிறது ஜவான் !!

Next Post

ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்றிருக்கும் ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்

Next Post

ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்றிருக்கும் 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.