• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘வான் மூன்று’ விமர்சனம்.

by Tamil2daynews
August 11, 2023
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வான் மூன்று’ விமர்சனம்.

 

எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தனது ஓடிடி நிறுவனத்தில் வெளியிடுவதில் ஆஹா தமிழ் முன்னணியில் இருக்கின்றது இந்த படம் எப்படி இருக்கின்றது பார்க்கலாம்.

சினிமாக்காரன் நிறுவனம் சார்பில், சென்னியப்பன் தயாரிப்பில், ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவான “வான் மூன்று” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ், லீலா தாம்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைப்படி… தான் விரும்பிய பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் சுஜித் குமார் ( ஆதித்யா பாஸ்கர் ). அதேபோல் தான் விரும்பிய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் சுவாதி ( அம்மு அபிராமி ). இவர்கள் இருவரும் ஒரே வார்டில் எதிரெதிர் பெட்டில் சிகிச்சை பெறுகின்றனர். பின்னர் இருவரும் தங்களது தவறை உணர்ந்து, எதார்த்தமான வாழ்க்கையை வாழ நினைக்கின்றனர்.
வான் மூன்று - விமர்சனம் 3.25/5 - Tamilveedhiஇதேபோல் தனது தந்தையின் பேச்சை மீறி, தான் விரும்பிய காதலனை திருமணம் செய்கிறாள் ஜோதி ( அபிராமி வெங்கடாசலம் ). சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இல்லற வாழ்வில்,ஜோதி திடீரென மயங்கி விழ, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஜோதி. பரிசோதனைக்குப் பிறகு ஜோதிக்கு ப்ரைன் டியூமர் நோய் இருப்பது தெரிய வருகிறது. இந்நிலையில் இவரது கனவன் ஜோஷ்வாவும் ( வினோத் கிஷன் ) மனைவியை சந்தோஷமா பார்த்துக் கொள்கிறார். மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஜோதி, அறுவைச் சிகிச்சைக்குச் செல்வதற்கு முன் தனது தந்தையை பார்க்க விரும்புகிறார்.

மேலும் வயதான தம்பதியர் சிவம் ( டெல்லி கணேஷ் ), சித்ரா ( லீலா தாம்சன் ) இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சித்ராவிற்கு இதயத்தில் கோளாறு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அறுவைச் சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது. தனது ஒரே மகனிடம் சென்று பணம் கேட்டும் கிடைக்காத நிலையில் விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறார் சிவம். மனைவி மீதிருந்த அன்பால் கஷ்டங்கள் எதையும் சித்ராவிடம் சொல்லாமல் சமாளிக்கிறார் சிவம். இருவரும் நாற்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் என்பதால் சித்ரா புரிந்து கொள்கிறார். கடந்தகால நினைவுகளை இருவரும் அசைபோடும் போது, இருவருக்குமான அற்புதமான காதலை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தப் படத்தில் மூன்று தலைமுறையினரின் காதலை மிகவும் அற்புதமாக திரைக்கதை, வசனங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப பின்னணியில், மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்தர் படம் பார்த்த திருப்தி.
டெல்லி கணேஷ், லீலா தாம்சன் இருவரது காதலை வெளிப்படுத்தும் போது, வயதான பெற்றோரை அனாதையாக தவிக்க விடாமல் பேணிக்காக்க வேண்டும் என்கிற கருத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாவதற்கு முன், தியேட்டரில் வெளியாகி வெகுஜன மக்களுக்கு இந்தக் கதையின் கரு சென்றடைய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.

எப்பொழுதுமே குடும்பங்கள் கொண்டாடும் படங்களை தமிழ் மக்களும், ரசிகர்களும் எப்பொழுதும் ஓரம் கட்டுவது போவதில்லை.

 அதில் இந்த படமும் அந்த ரகமே ஓடிடியில் மிகப்பெரிய வரலாறு படைக்கப் போகிறது இந்த படம்.

படக்குழுவினர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Previous Post

Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும்“கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!

Next Post

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.