• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும்“கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது !!

by Tamil2daynews
August 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும்“கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது  !! 

 

Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர். முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய சாம்ராஜ்யத்திற்கு கொண்டு செல்லும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஓணம் பண்டிகை கொண்டாட்டமாகப் ஆகஸ்ட் 24, 2023 அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

‘கிங் ஆஃப் கொத்தா’  உலகம் வித்தியாசமானது,  விசுவாசம் ஒரு அபாயகரமான சூதாட்டமாகவும், அரியணைக்கான பந்தயம் இடைவிடாத முயற்சியாகவும் இருக்கும் இந்த உலகில் கோதாவிற்கு ராஜாவாகும் ஒரு கவர்ச்சியான கதையை இப்படம் சொல்கிறது. ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஒரு வல்லமை மிக்க போட்டியாளராக துல்கர் சல்மான் முதன்மை வேடத்தில் பிரகாசிக்கிறார்.

புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர், வெகு கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பிரபஞ்சத்தின் ஒரு அற்புதமான கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகளும் இதயத்தை அதிரச்செய்யும் ஆக்சன் காட்சிகளும் ஒன்றிணைந்து புதுமையான அனுபவத்தை உருவாக்குகின்றன. ரகசியங்கள் உடைந்து கூட்டணிகள் நொறுங்கும்போது, துரோகமும் மர்மமும் நிறைந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உலகிற்குள் ஒரு உற்சாகமான பயணத்திற்குப் பார்வையாளர்கள் தயாராகலாம்.

நடிகர் துல்கர் சல்மான் படம் குறித்துக் கூறுகையில், “‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் ஒரு அசாதாரண பயணம். அழுத்தமான கதாபாத்திரங்கள்,சிறப்பான கதை மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு என ஒவ்வொன்றிலும் இந்த படம் தனித்து நிற்கிறது. முதலில் Zee Studios மற்றும் Wayfarer Films உடன் இணைந்து பணியாற்றியது உற்சாகமான அனுபவம். என் ரசிகர்களுக்கு இது சரியான ஓணம் விருந்தாகும்.”

Zee Studios South தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் படம் குறித்துக் கூறுகையில்.., “இந்த ஓணத்தில் ‘கிங் ஆஃப் கொத்தா’வை உலகளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் அழுத்தமான கதை, அதற்கேற்ப மிகப்பெரிய பொருட்செலவோடு உருவாகியுள்ளதால்,  ஒரு தரமான படைப்பிற்கு உறுதியளிக்கிறது. படத்தின் உருவாக்கம் பார்வையாளர்களை வசீகரிக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளதால் இது ஒரு மறக்க முடியாத பயணமாக இருக்கும், மேலும் இந்த பிரமாண்ட படத்தைத்  தயாரிக்க Wayfarer Films மிகச்சிறந்த கூட்டணியாக இருந்தார்கள்.

ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷபீர் கல்லரக்கல், பிரசன்னா, நைலா உஷா மற்றும் கோகுல் சுரேஷ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில்,  ‘கிங் ஆஃப் கொத்தா’ மெருக்கேறியுள்ளது.

Zee Studios மற்றும் Wayfarer Films கூட்டணியில் ‘கிங் ஆஃப் கொத்தா’ ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ளது , இந்த படைப்பு அற்புதமான பெயர் பெற்ற இரண்டு நிறுவனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் அசைக்க முடியாத அதிகாரத்திற்கான போரை, ஒரு மாறுபட்ட உலகத்தை நம் கண்முன் கொண்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்திற்கு களம் அமைத்துள்ள நிலையில், இப்படம் ஆகஸ்ட் 24, 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

Link-,👇
https://www.youtube.com/watch?v=dljEVygvwG8
Previous Post

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

Next Post

‘வான் மூன்று’ விமர்சனம்.

Next Post

'வான் மூன்று' விமர்சனம்.

Popular News

  • சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஹே ப்ரூஸ்” – உலகம் முழுவதும் கவனம் பெற்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.