• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்க எம் ஏ ராஜேந்திரன் இயக்கி தயாரிக்கும் ‘நான் கடைசி வரை தமிழன்” பட தொடக்க விழா

by Tamil2daynews
September 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்க எம் ஏ ராஜேந்திரன் இயக்கி தயாரிக்கும் ‘நான் கடைசி வரை தமிழன்” பட தொடக்க விழா

 

சி ஆர் டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.  ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ” நான் கடைசி வரை தமிழன்” .இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள்  விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நான் கடைசி வரை தமிழன் படத்தின் தொடக்க விழா  சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் தாரை தப்பட்டை முழங்க  பூஜையுடன் நடந்தது. பின்னர்  டிஜிட்டல் தியேட்டரில்  பட பெயர் அறிவிப்பு விழா நடந்தது. இதில் பிரபல  இயக்குனரும், இப்படத்தின் இசை அமைப்பாளருமான  டி.ராஜேந்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன் , நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர் தயாரிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த் தினார்கள்.
முன்னதாக பட தயாரிப்பா ளரும்.இயக்குநருமான எம்.ஏ.ராஜேந்திரன்  பேசியது:

நான் கடைசி தமிழன் பட தொடக்க விழாவிற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அனைவரும் நமது சகோதர சகோதரிகளே. நாம் இந்துவாக முஸ்லீமாக கிறிஸ்தவனாக இருக்கலாம் ஆனால் முதலில் மனிதனாக இருப்போம். தமிழன் என்றாலே அது வரலாறு, என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ்..  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவ்விழாவுக்கு வந்திருக்கும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர்  அன்புச் செல்வன்,  இமான் அண்ணாச்சி,நிர்மல்,  ராஜா, ஜெய்பாபு, நடராஜன்  உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். நன்றி

கடைசி வரை தமிழன் படத்தின் கதை மிகவும் மாறுபட்ட வித்ததில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு விஞ்ஞானி,.மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக,ஏன்  என்பதுதான் கதை.

தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன்.ஆங்கிலத்தில் அவதார் 2ம் பாகம் படம் 160 மொழியில் எடுக்கப்பட்டது.  அதை மிஞ்சும் வகையில் 163 மொழியில் நான் கடைசி வரை தமிழன் படம் உருவாகிறது. எந்த மதமாக இருங்கள் நாம் முதலில் மனிதனாக இருப்போம்  அவதாா் படம் சாத்தியம் என்றால்  நான் கடைசிவரை தமிழன் படமும்  சாத்தியமாக்குவேன்  தமிழன் என்றால் என்றென்றும் உலக  வரலாறு தான்…

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் கராத்தே ராஜா பேசியதாவது:
இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சிறுபிள்ளையாக இருந்தபோது டி.ராஜேந்தர் பாடல்கள் என்றால் தாளம்போட்டு பாடிக்கொண்டே இருப் பேன்.அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும் . நான் கடைசி வரை தமிழன் என்று படத்தின் பெயரை கேட்டாலே மனதில் பதியும் அளவுக்கு அருமையான டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.  இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது:

நான் கடைசி வரை தமிழன் 163 மொழிகளில் இப்படம் உருவாகிறது  இப்படத் தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்த ஒரு ஜாம்பவான்  டி.ஆர் இங்கு வந்திருப்பதுதான் .

கொஞ்ச நாளாவே  சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது. என்னைக் கேட்டால் அந்த பட்டத்தை டி.ராஜேந்தருக்கு தரலாம்.  (இப்படி சொன்னவுடன் டி.ராஜேந்தர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் என்றார்).

ஆர்.கே.அன்புசெல்வன் பேசியதாவது:

நான் கடைசி வரை தமிழன் என்ற டைட்டிலை கேட்கும்போதே வீரம் வெறி பிறக்கிறது. இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கிறார். பட டைட்டிலை கேட்டவுடனே அவர் இசை அமைக்க ஒப்புக்கொண்டார் பண்ணாரி அம்மன் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் 30 வருடத்துக்கு பிறகு மீண்டும் வெளிப்படத்துக்கு அவர் இசை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி.

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் பேசியது: 

இந்த படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம் ஏ.ராஜேந்திரன் கூறினார். ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன் அந்த திறன் இந்த ராஜேந்திரன் இடத்தில் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்த பட டைட்டிலில் தமிழன் என்ற ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். முருகன் என்றால் தமிழ் ,  நான் கடைசி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது. இயக்குனர் ராஜேந்திரனிடம்  எனக்கு பிடித்தது பிடிவாதம் நானும் பிடிவாதக்காரன். இயக்குனர் இராஜேந்திரனிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க,  உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை  தமிழன்னு, சொல்லுங்க,  மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க , பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க  என்றேன். இல்லை சார். கடைசி வரை தமிழன் தான் எனக்கு பிடித்திருக்கிறது  என்றார்.  அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு  தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படத்துக்கு தமிழில் டைட்டில் வைத்திருக் கிறார். அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்….
Previous Post

நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சி மிக அவசியம்..!

Next Post

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!

Next Post

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏற்காட்டில் பஸ் கவிழ்ந்து விபத்து, பல பேர் பலி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு சுவாசப் பயிற்சி மிக அவசியம்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.