ஒரு கர்ப்பிணி பெண்ணை நான்கு பேர் சேர்ந்து, ஒரு காரில் கூட்டிசெல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிழவன் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அந்த கிழவன் இந்த காருக்கு வழி கொடுக்காமல் செல்கிறார். அந்த காரிலிருந்து ஹாரன் அடித்தும், கிழவன் அசருவதாக தெரியவில்லை. வழி விடுவதாகவும் தெரியவில்லை.
தயாரிப்பாளரே படத்தின் கதாநாயகன்.இவர் அந்த கார் ஓட்டும் காட்சியில் கர்ப்பிணிப் பெண் கூட இருந்தும் பின்னால் வரும் வண்டிகளுக்கு ஏன் வழி விடவில்லை என்று இவர் மீது கோபம் வருவது உண்மை.அவ்வளவு அடி வாங்கியும் இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று படம் பார்பவர்களை நினைக்க வைக்கும் ஆனால் உண்மை தெரிந்த பிறகு ஐயோ பாவம் இவரின் நடிப்பு கனக்கச்சிதம்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வு மிக அருமையாக உள்ளது.பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
வயதானவர்களுக்கு வயசாயிடுச்சு என்ற கவலை இல்லாமல் நம்மால் முடிந்த வித்தையை தெரிந்து கொண்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வயதானவர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் இந்த படம்.
முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைவு தான் இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் சிறிய பட்ஜெட்டில் ஒரு சிறப்பான படம் எடுத்திருக்கும் இவர்களை வரவேற்கலாம்.
மொத்தத்தில் இந்த ‘கெழப்பய’ னுக்கு வயசாகவில்லை.









