• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

by Tamil2daynews
September 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

 

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது.

“ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது..” என்கிறார் நாயகன் கார்த்தி.Image

தென்னிந்திய சினிமாவின் மிக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். “துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும் இயக்குநர் ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் தான் என்னை இந்த படத்துக்குள் இழுத்து வந்தது. #குக்கூ மற்றும் #ஜோக்கர் என அவருடைய முந்தைய இரண்டு படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். மேலும் இந்த சமூகம், இங்குள்ள கலாச்சாரம் குறித்த அவரது புரிதல் ரொம்பவே அழகானது” என்கிறார் கார்த்தி..

குறிப்பாக வாழ்க்கை, ரொமான்ஸ், நட்பு மற்றும் மதுபோதை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ராஜூ முருகன் எழுதிய ‘வட்டியும் முதலும்’ என்கிற அவரது கட்டுரை தொகுப்பும் மேலும் அதை தழுவி #ஜப்பான் போன்ற ஒரு க்ரைம் கதை உருவானதும் நடிகர் கார்த்தியை திகைக்க வைத்து விட்டது.Image

“சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் விதமான சாத்தியம் இந்த ஜப்பான் படத்துக்கு இருக்கிறது. அதனால் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என நான் விரும்பினேன். அவருடைய பார்வை இப்படத்தை மாற்றும் என நாங்கள் நம்பியதை போலவே நாங்கள் இப்போது சாதித்திருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்குகிறோம்” என்கிறார் கார்த்தி.

“திரையுலகில் சகோதரர்கள் ஒரே காலகட்டத்தில் நடிகர்களாக பயணித்து வருவது அரிதான ஒன்று.. அதனால் அண்ணனுடன் (சூர்யா) எப்போது ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என பலரும் கேட்கின்றனர். நானும் அண்ணனும் சேர்ந்து நடிப்பதற்கான பொருத்தமான கதைகளை இருவருமே கேட்டு வருகிறோம். முன்பு கூட பயந்தேன்.. ஆனால் இப்போது உறுதியாக இருக்கிறேன். அதனால் நிச்சயமாக இருவரும் இணைந்து நடிப்போம்..” என ஒரு சந்தோஷ தகவலையும் ரசிகர்களுக்கு பரிமாறியுள்ளார் கார்த்தி.

#ஜப்பான் படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் பேண்டஸி ஆக்சன் படமாக உருவாகி வரும் படம் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தாக ‘96’ புகழ் சி.பிரேம்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார் கார்த்தி.

(சமீபத்தில், கார்த்தி அளித்த பேட்டியின் சில வரிகள்)

Previous Post

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

Next Post

‘ஆர் யூ ஒகே பேபி’ – விமர்சனம்

Next Post

'ஆர் யூ ஒகே பேபி' - விமர்சனம்

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.