• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்

by Tamil2daynews
September 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்

 

எப்போதாவது அத்திப்பூத்தாற் போல  சில  படங்கள் வெளியாகி  ரசிகர்களுக்கு  மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான்  சமீபத்தில் வெளியான  ‘நூடுல்ஸ்’. அருவி படம் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி,  முதன்முறையாக  இயக்கத்திலும் கால் பதித்து  இந்த படத்தின் மூலம் ஓர் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார்.  இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர  கதாபாத்திரங்களில்  ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும்  விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக  மாற்றியதே  இயக்குனர்  மதனுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்.

ஹரீஷ் உத்தமன் மட்டுமல்ல, நாயகி ஷீலா ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரியாக  நடித்திருந்த  மதன் தட்சிணாமூர்த்தி வக்கீலாக நடித்திருந்த வசந்த் மாரிமுத்து, மேல் வீட்டுக்காரர் சங்கர்  கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசு குழந்தை ஆழியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருமே  அந்த கதாபாத்திரங்களாக மாறி நடிப்பில் நூறு சதவீத பங்களிப்பை  கொடுத்திருந்தனர்.  சொல்லப்போனால் படம் பார்க்கும் ஒவ்வொருவருமே அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்கு அருகிலிருந்து பார்த்து அவர்களின்  கஷ்டத்தை நாமே படுவது போல உணர வைக்கும் அளவிற்கு வெகு நேர்த்தியாக இப்படத்தை  இயக்கியுள்ளார் மதன் தட்சிணாமூர்த்தி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தொகுப்பாளர் சரத்குமார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரின் பங்கும் இன்றியமையாததாக அமைந்து நல்ல சினிமா ரசிகர்களுக்கு நூடுல்ஸ் விருந்தானது எனில் அது மிகையாகாது,.

நூடுல்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி கூறும்போது,

“’நூடுல்ஸ்’ மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பை கொடுத்தது எனவும்,

ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது எனவும் கூறினார்.,

மேலும் நூடுல்ஸ் படத்தை பாராட்டிய சில தயாரிப்பாளர்கள் நூடுல்ஸ் குழுவினரை இதே போன்ற நல்ல படங்கள் செய்யவேண்டும் என வரவேற்று இருப்பது மேலும் மகிழ்ச்சியை தருகிறது எனவும்.,

திரைத்துறையை சேர்ந்த பலரின் பாராட்டுகள் அடுத்த படத்திற்கான பொறுப்பையும் கவனத்தையும் அதிகரித்துள்ளது எனவும்,

இச்சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ROLLING SOUND PICTURES பிரக்னா அருண் பிரகாஷ், LIME TREE CINEMAS cinemas சுருளிராஜ் மற்றும் V HOUSE PRODUCTIONS தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என பெருமிதத்தோடு கூறியுள்ளார்..
Previous Post

ஐமா ‘ திரைப்பட விமர்சனம்

Next Post

‘டீமன்’ – விமர்சனம்

Next Post

'டீமன்' - விமர்சனம்

Popular News

  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் குடும்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.