• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மிஷன் சாப்டர்-1 விமர்சனம்

by Tamil2daynews
January 13, 2024
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிஷன் சாப்டர்-1 விமர்சனம்

 

அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது.

படத்தின் முதல் காட்சியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிட்டார்கள் என்பதுபோல் உள்ளது. இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும். இது இந்திய அரசுக்கு தெரியவே, உடனே தீவிரவாதிகள் தங்களின் கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் செல்கின்றனர்.

லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார். அருண் விஜய் தனது குழந்தையின் மருத்துவ தேவைக்காக லண்டன் செல்கின்றார். அங்கு அவரின் பர்ஸை திருட முயற்சி செய்யும் திருடர்களைத் தாக்கும்போது காவல்துறை தடுக்கின்றது. அப்போது காவல்துறையையும் தாக்குவதால் அருண் விஜய் திவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்யப்படுகின்றது.  அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டனரா இல்லையா? அருண் விஜய் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதா இல்லையா என்பது மீதி கதை.
Image
 சண்டைக்காட்சிகள் என்றாலே இறங்கி அடிக்கும் அருண் விஜயின் பசிக்கு தீனிபோடும் விதமாக ஸ்டண்ட் சில்வாவின் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தது. ஆனால் அந்த ஆக்‌ஷனுக்கு எல்லாம் பொருந்திப் போகும் வில்லன் கதாப்பாத்திரம் இல்லை. படம் முழுக்க வில்லன் கேமரா முன்பு நின்று கொண்டு பேசிக்கொண்டு உள்ளார். இறுதியாக ஒரு சண்டை செய்கின்றார் அதுவும் ரசிக்கும்படியாக இல்லை. எமி ஜாக்‌ஷன் படம் முழுக்க டயலாக் டெலிவரி மட்டும் செய்துகொண்டு உள்ளார். ஒரு காட்சியில் மட்டும் எமி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றார். படத்தில் இருக்கும் ஒரு சிறப்பான காட்சி என்றால் அது மிளகாய்ப்பொடி காட்சிதான். அருண் விஜயின் குழந்தை பேசும் செண்டிமெண்ட் வசனங்கள் கொஞ்சம் உருகவைக்கின்றது. ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலே அடித்து நொறுக்கும் அருண் விஜய் இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஆனால் அது கதைக்கும் ஒட்டவில்லை, ரசிகர்களிடமும் எடுபடவில்லை.
Mission Chapter 1: Arun Vijay comes up with an exciting update on Vijay's action drama, fans elated

படத்தின் திரைக்கதை தரமாக இருக்கும்போது அதற்கு நியாயம் கற்பிக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்க்கும். ஆனால் இந்த படத்தின் திரைக்கதை ஒட்டாததால் சண்டைக்காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் நம்மை லண்டனுக்கே அழைத்துச் செல்கின்றன. படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னனி இசை கவனம் ஈர்க்கின்றது.

ஒரு படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இன்றைய காலகட்டத்தில் நடிக்கக்கூடிய ஒரு ஹீரோ என்றால் அதை அருண் விஜய் என்று சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கக் கூடிய படமே.
Tags: AL vijayamy jacksonArun Vijaymission chapter 1 movie reviewmission chapter 1 reviewmission chapter 1 review tamil
Previous Post

மெர்ரி கிறிஸ்துமஸ் – விமர்சனம்

Next Post

‘கேப்டன் மில்லர்’ விமர்சனம்

Next Post

'கேப்டன் மில்லர்' விமர்சனம்

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.