• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘டியர்’ – விமர்சனம்

by Tamil2daynews
April 12, 2024
in விமர்சனம்
0
‘டியர்’ – விமர்சனம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டியர்’ – விமர்சனம்

 

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் ”டியர் (DeAr)”.

2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட்நைட்” படம் வெளியானது. இதில் மணிகண்டனுக்கு இருக்கும் குறட்டை பிரச்சினை வைத்து கதை அமைக்கப்பட்டிருந்தது. இதை பிரச்சினை கதாநாயகிக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று சற்றே மாற்றி டியர் படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை ஒரே மாதிரியாக காணப்பட்டாலும் திரைக்கதையில் இயக்குநர் வித்தியாசம் காட்டியிருக்கிறாரா என பார்க்கலாம்.
சென்னையில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவருக்கு குன்னூரில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷூக்கு சின்னதாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனை ஜி.வி.பிரகாஷூக்கு வேலை போகும் நிலைக்கு தள்ளுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்கிறார். முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுக்கிறார். நீதிமன்றம் சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இதில் குறட்டை பிரச்சினை தீர்ந்ததா?, தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே டியர் படத்தின் கதையாகும்.
இந்த படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் இன்னும் நடித்திருக்கலாம் என்னும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. குறட்டை பிரச்சினையால் தான் ஆசைப்பட்ட கனவு சிதையும் போது ஆக்ரோஷப்படுவார் என பார்த்தால் சிம்பிளான கோபத்தில் கடந்து செல்கிறார். அதேபோல் தன்னுடைய பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே குறைபாடாக கருதாமல் இருக்கும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் லாஜிக்காக பார்த்தால் ஓகே என்றாலும், கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் படம் முழுக்க வருவது போல இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறது. இவர்களை விட காளிவெங்கட் – நந்தினி கேரக்டர் ரசிக்க வைக்கிறார்கள். மேலும் தலைவாசல் விஜய் – ரோகினி தொடர்பான காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஏதோ கிளைமேக்ஸ் அட்வைஸ் மாதிரி சிம்பிளாக முடித்து விட்டார்கள்.

குட்நைட் படத்தில் இருந்து மாறுபட்ட கதை என்பதால் நீங்கள் தாராளமாக தியேட்டருக்கு போகலாம். அதேசமயம் உங்களுக்கு கண்டிப்பாக பொறுமை அவசியம். காரணம் மெதுவாக நகரும் திரைக்கதை, தேவையில்லாத சில காட்சிகள், திடீரென வரும் கிளைக்கதை எல்லாம் கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்துவது என்பது உண்மை. கணவன், மனைவிக்கும் இடையேயான பிரச்சினை என படத்தை தொடங்கி விட்டு புரிதலுக்காக வேறு எங்காவது கதை சென்றால் எப்படி?. இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான கதைகளில் உணர்ச்சிகள் மிகவும் முக்கியம். இதை தனது அடுத்தப்படத்தில் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் சரியாக கையாள்வார் என நம்பலாம்.

மொத்தத்தில் இந்த படம் பார்க்கும் பொழுது வெகு சில நாட்களுக்கு முன்பு படம் பார்த்த மாதிரியே ஒரு மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றுகிறது.புதுமை என்று எடுக்கும் புதுமுக இயக்குனர்களே கதையின் அழுத்தத்தையும் கதாபாத்திரத்தில் தன்மையையும் உணர்ந்து திரைக்கதை அமைத்தால் நீங்கள் ஜெயித்திருக்கலாம்.

 மொத்தத்தில் இந்த ‘டியர்’ படம் பார்க்கும் பொழுது நமக்கும் குறட்டை வருகிறது
Tags: Aishwarya RajeshDeAr Movie 2024DeAr Movie Review tamilDeAr ReviewGV Prakash Kumar
Previous Post

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.

Next Post

‘ரோமியோ’ – விமர்சனம்

Next Post
‘டியர்’ – விமர்சனம்

'ரோமியோ' - விமர்சனம்

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.