• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

by Tamil2daynews
September 24, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து,  இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

 

ZEE5  தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான  கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே ZEE5 இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் ZEE5 இல் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடராகும்.

உத்தரகாண்ட் மலைகளில் ‘கியாரா கியாரா’ கதை விரிகிறது, அங்கு யுக் ஆர்யா (ராகவ் ஜூயல்) என்ற போலீஸ் அதிகாரி, கடந்த கால போலீஸ் அதிகாரியான ஷௌர்யா அன்த்வால் (தைரிய கர்வா) உடன், மிகத்துல்லியமாக 11 மணிக்கு   நொடிகள் மட்டும் கடந்த காலத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வாக்கி-டாக்கியைக் கண்டுபிடிக்கிறார்.  15 ஆண்டுகளாக ஊரை ஆட்டிப்படைத்த அதிதி என்ற இளம்பெண்ணின் கொலை உட்படத் தீர்க்கப்படாத குற்றங்களைத் தீர்க்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் கடந்த காலத்தை மாற்றுகிறார்கள், இது நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் கியாரா கியாரா வெளியானது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் கூறுகையில்..

‘கியாரா கியாரா’ தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சீரிஸ் எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, ரசிகர்களின்  அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. ZEE5  மூலம், எங்கள் கதை இந்தியா முழுதும், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,  உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடாக, மொழித் தடைகளைத் தகர்த்து, ‘கியாரா கியாரா’ இன்னும் அதிகமான இதயங்களைத் தொடவுள்ளதில்,   நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த பல மொழி டப்களை ரசிகர்கள் கொண்டாடுவதைக் காண ஆவலோடு இருக்கிறோம்.

ராகவ் ஜூயல் தனது கூறுகையில்..

“தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் இப்போது தங்கள் பிராந்திய மொழியில் ‘கியாரா கியாரா’வின் அற்புத அனுபவத்தை அதன் மாயத்தன்மை மற்றும் சிலிர்ப்பைப் பார்த்து, அனுபவிக்க முடியும் என்பதை அறிந்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூளையை அதிரவைக்கும்  அதிரடி  திருப்பங்களால் நிரம்பியுள்ளது, அது உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். இந்த சீரிஸில் வாக்கி-டாக்கி கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது, கதைக்கு ஒரு புதிய பலத்தைச் சேர்க்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும், எதிர்பாரா ஆச்சரியங்கள் உங்களை வியப்பின் உச்சிக்குக் கூட்டிச்செல்லும்.   தவறவிடக்கூடாத  ஒரு அற்புதமான சீரிஸ் இப்போது ZEE5 இல் உங்கள் மொழியில்.

செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ‘கியாரா கியாரா’வை தமிழ் மற்றும் தெலுங்கில் பார்வையாளர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம்!

ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.
Previous Post

சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்

Next Post

‘மெய்யழகன்’ – விமர்சனம்

Next Post
‘மெய்யழகன்’ – விமர்சனம்

'மெய்யழகன்' - விமர்சனம்

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.