• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘சார்’ – விமர்சனம்

by Tamil2daynews
October 19, 2024
in விமர்சனம்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சார்’ – விமர்சனம் 

 

ஒரு மனிதனுக்கு கல்வி எந்த அளவுக்கு அவனை உயர்த்தும் என்ற கருத்தை உணர்த்தும் நல்ல படம் சார்.

ஜாதிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இன்றைய தலைமுறையிடம்  ஜாதி வன்மத்தை தூண்டும் கடைசி படமாக இதுவே இருக்கட்டும் என்று தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்துவிட்டு

இப்பொழுது விமர்சனத்தை பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் மாங்கொல்லை கிராமத்தில் 80களில் நடக்கும் கதை தான் சார்.

ராமநாதபுரத்தில் இருந்து திரும்பி வரும் ஞானம்(விமல்) தன் தந்தை அரசனின்(சரவணன்) அரசு உதவி பெறும் பள்ளியை நடத்தும் பொறுப்பை ஏற்கிறார். இது வழக்கமான அப்பா, மகன் கதை தான். முதலில் அப்பாவின் வழியில் செல்ல மறுத்து பின்னர் அதை பின்பற்றுகிறார் விமல்.

Vemal's 'Sir' teaser: Fights the religious superstitions that stand against education! - Tamil News - IndiaGlitz.com

உயர் ஜாதி, கிராமத்தினரின் மூட நம்பிக்கை, பள்ளியை அழிக்கத் துடிக்கும் பஞ்சாயத்து, ஆதரவு கொடுக்க மறுக்கும் போலீசார் என சார் கதை செல்கிறது. மாங்கொல்லையை சேர்ந்தவரின் மகனான சக்திவேல் (சிராஜ்) தான் முக்கிய வில்லன். தான் இழந்ததை திரும்ப பெறுவது தன் உரிமை என நினைக்கிறார். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.

கல்வி தான் வறுமையை போக்கும் கருவி என்பதே கதைக் கரு. கல்வி கற்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மக்களை நசுக்கப் பார்க்கிறார்கள் உயர் ஜாதியனர். ஜாதி, மதம், கல்வி எனும் மிகவும் பழைமையான விஷயத்தை தன் பாணியில் அழகாக கொடுத்திருக்கிறார் போஸ் வெங்கட்.

தனக்கு கொடுத்த கதாபாத்திரமாக மாறியிருக்கிறார் விமல். அவரின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அவரின் கிரஷ்ஷான சாயா தேவியின் நடிப்பு அருமை. தந்தையாக சரவணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பக்கா வில்லனாக நடித்திருக்கிறார் சிராஜ்.

80கள் காலகட்டத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல்களை குறைத்திருக்கலாம்..

ஒரு சில விஷயங்களை படத்தில் குறைத்து வட்டு திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தார் இந்த சாருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.
Previous Post

கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் – திருமாவளவன் புகழாரம் !!

Next Post

‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.