• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் ‘மிஸ்யூ’ படத்திற்கான இன்ஸ்பிரேஷன் ; இயக்குநர் N.ராஜசேகர்

by Tamil2daynews
November 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் ‘மிஸ்யூ’ படத்திற்கான இன்ஸ்பிரேஷன் ; இயக்குநர் N.ராஜசேகர்

 

‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும்

 நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை  இயக்கியவர் N.ராஜசேகர் இந்த படத்தை ரொமாண்டிக் பீல் குட் படமாக இயக்கியுள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் N. ராஜசேகர்

“’லவ் யூ’ வை விட ‘மிஸ் யூ’ என்கிற வார்த்தையில் தான் ரொம்பவே லவ் இருக்கிறதால் தான் அந்த டைட்டிலை வைத்துள்ளோம். யாருமே தங்களுக்கு பிடித்த பெண்ணைத்தான் லவ் பண்ணுவார்கள். இதில் நாயகன் தனக்கு பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார். இந்த ஒரு லைன் தான் சித்தார்த்தை இம்ப்ரஸ் பண்ணி இந்த படத்திற்குள் அழைத்து வந்தது. எப்படி பிடிக்காத பெண்ணை ஒருவன் லவ் பண்ணுகிறான், அவளுக்கு அது தெரிந்திருந்தும் எப்படி கன்வின்ஸ் பண்ணுகிறான் என்பதற்கு பொருத்தமான காரணத்துடன் தான் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் இந்த கதையை உருவாக்கியுள்ளேன். நிச்சயம் இந்த படத்தின் கதை தனித்தன்மையுடன் இருக்கும்.

சித்தார்த் சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்யும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் இளமை துள்ளலுடன் காதல் நாயகனாக இப்படத்தில் களமிறங்குகிறார் சித்தார்த். தெலுங்கில் சித்தார்த் நிறைய லவ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இது போன்ற ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. வழக்கமாக செய்து வந்த ஒன்றை நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் செய்யும்போது அதுவே வித்தியாசமாக தான் இருக்கும். அந்த வகையில் அவருக்கு இது வித்தியாசமான படம் தான். இது ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் படம்.

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். படம் பார்த்த அனைவருமே ஆஷிகா ரங்கநாத் புதுமுகம் என்று தெரியாதபடி இந்த படத்துக்கு ஒரு பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார் என்று பாராட்டினார்கள்.

இதில் மொத்தம் எட்டு பாடல்கள். ஆறு முழு நீள பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை சித்தார்த் பாடியுள்ளார். சித்தார்த் பாடிய  “நீ என்ன பார்த்தியா..” மற்றும் “சொன்னாரு நைனா” பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எழில் சாரிடம் மனம் கொத்தி பறவை படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தேசிங்கு ராஜாவில் வசனம் எழுதியுள்ளேன். மனம் கொத்தி பறவை முடிந்த சமயத்தில் நான் இயக்குனராகும் அளவிற்கு தயாராகி இருக்கவில்லை. அப்படி தயாராகி வந்தபோது சிவகார்த்திகேயன் பெரிய இடத்திற்கு  போய்விட்டார்.. இருந்தாலும் அவரிடம் கதை சொல்ல முயற்சித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார்.
Previous Post

இந்த ஜாலாக்கெல்லாம் என்கிட்ட வேண்டாம், நயன்தாராவுக்கு தனுஷ் பதிலடி..!

Next Post

யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது

Next Post

யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா' சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.