• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சொர்க்கவாசல் – விமர்சனம்

by Tamil2daynews
November 30, 2024
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சொர்க்கவாசல் – விமர்சனம் 

 

திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் சொர்க்கவாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் கூடுதல் எழுத்தாளர்களாக பணியாற்றி உள்ளனர். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா எடிட்டிங் மற்றும் கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளனர். சொர்க்கவாசல் படத்தில் RJ பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நாட்டி, சனியா ஐயப்பன், ஷரஃப் உ தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், காக்கா கோபால், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு உண்மை கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். |

கதை 1999 ஆம் காலகட்டத்தில் நடைபெறுகிறது. ஆர்ஜே பாலாஜி பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது அம்மாவுடன் பிளாட்பாரத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். விரைவில் அவருக்கும் அவரது காதலி ரேவதிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. தனது கடையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பேங்க்கில் லோன் வாங்க முயற்சி செய்கிறார் ஆர்ஜே பாலாஜி. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கிய அரசு அதிகாரியும் உதவி செய்கிறார். ஆனால் திடீரென்று அந்த அரசு அதிகாரி சில மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார், இந்த கொலைக்கு ஆர்ஜே பாலாஜி தான் காரணம் என்று சந்தேகித்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைகின்றனர். சிறையில் ஆர்ஜே பாலாஜிக்கு என்ன ஆனது? உண்மையில் கொலை செய்தது யார் என்பதே சொர்க்கவாசல் படத்தின் கதை.
Sorgavaasal tamil Movie - Overview

ஆர் ஜே பாலாஜிக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான கதை இது. அதிகம் பேசாத, காமெடி செய்யாத, மற்றவர்களை கலாய்க்காத ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்திபனாகவே வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அடிவாங்கி, ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் டயலாக் காட்சிகள் நன்றாக இருந்தது. இந்த படம் நிச்சயம் ஒரு நடிகராக அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும். சிறை மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பிரபல ரவுடியாக செல்வராகவன் சிகாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு டான் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் எனது வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். சிறை கண்காணிப்பாளராக கருணாஸ், ஓய்வு பெற்ற நீதிபதியாக வரும் நாட்டி, ஆர்ஜே பாலாஜியின் காதலியாக நடித்துள்ள சாணியா ஐயப்பன் ஆகியோர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எஸ்பி சுனில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷரஃப் உ தீன் மற்ற நடிகர்களை தாண்டி தனியாக தெரிகிறார். இவர் நல்லவரா கெட்டவரா? அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதுவே அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு வெற்றியாகவும் உள்ளது. இவர்களை தாண்டி பாலாஜி சக்திவேல், போர் கொடி, சந்தான பாரதி மற்றும் ஹக்கிம் ஷா ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.  படம் முழுக்க ஒரு ஜெயிலில் தான் நடக்கிறது. அது செட் என்று தெரியாத அளவிற்கு ஜெயச்சந்திரன் சிறப்பான வேலை செய்துள்ளார். தினேஷ் சுப்புராயன் ஸ்டன்ட் பல இடங்களில் நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் கொஞ்சம் நம்பும் படி இருந்திருக்கலாம். படம் முழுக்க தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லாமல் கதைக்கு ஏற்றார் போல அடுத்தடுத்து நகர்த்தி செல்கிறார் இயக்குனர் சித்தாத் விஸ்வநாத்.
Sorgavaasal review: RJ Balaji prison drama falls short of brilliance - India Today

இருப்பினும் ஒரு சில கதாபாத்திரங்கள் சரியாக சொல்லப்படவில்லை. குறிப்பாக சிகாமணி கதாபாத்திரத்தை முதலில் பெரிய ரவுடி என்று செல்கின்றனர். பிறகு போலீஸ் தரப்பில் நீ நிறைய நல்லது செய்கிறாய் என்றும் சொல்கின்றனர். இதனால் அந்த கதாபாத்திரம் உண்மையில் யார் என்பது சரியாக புரியவில்லை.  படத்தின் நாயகன் பார்த்திபன் கதாபாத்திரம் பல இடங்களில் தனது ஹீரோயிசத்தை காட்ட வழிகள் இருந்த போதிலும் அதை எதுவுமே செய்யாமல் இருந்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசை கூடுதல் சிறப்பு. படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள A சர்டிபிகேட்டை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்கவே சண்டை, ரத்த காட்சிகள் என நிறைந்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு இது போன்ற படங்கள் புதிது என்றாலும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.

மொத்தத்தில் இந்த சொர்க்க வாசலுக்கு போய் வரலாம்.
Previous Post

லைகா புரொடக்‌ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்!

Next Post

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

Next Post

திரைத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.