• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சப்தம் – விமர்சனம் ரேட்டிங் 3.5 / 5

by Tamil2daynews
March 1, 2025
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சப்தம் – விமர்சனம் ரேட்டிங் 3.5 / 5

 

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”சப்தம்”.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தமன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அருண் பத்மநாபன்.
தயாரித்திருக்கிறார் 7ஜி சிவா.
மூணார் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் நூலகத்தில் அடுத்தடுத்து சில மாணவர்கள் அங்கு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த தற்கொலை எதனால் நடைபெறுகிறது என்பதை விசாரிக்க பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதி அங்கு வருகிறார். இறந்து போன மாணவர்களின் உடலை பார்க்கும்போது கை, கால், முகம் அனைத்தும் கோணல்மாணலாகவும் உடலில் சைத்தானின் குறியீடு போன்ற ஒன்று இருப்பதையும் பார்க்கிறார் ஆதி.
இதனால் அந்த நூலகம் முழுவதும் அமானுஷ்யத்தால் சூழ்ந்து இருக்கிறது என்பதை கண்டறிகிறார் ஆதி. அந்த நூலகம் பல வருடங்களுக்கு முன்பு தேவாலயமாக இருந்ததையும் கண்டுபிடிக்கிறார்.
தேவாலயத்திற்குள் இருக்கும் அமானுஷ்யங்கள் யார்.?? தேவாலயம் எப்படி அமானுஷ்யங்களின் கூடாரமாக மாறியது.?? மாணவர்கள் எதற்காக இறந்து போகிறார்கள்.??? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
நாயகனாக படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் ஆதி.. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஈரம் படத்தில் எப்படியான நடிப்பை கொடுத்திருந்தாரோ, அதே நடிப்பை இப்படித்திலும் கொடுத்து தனது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறார் ஆதி. ஆனால், படம் முழுக்கவே ஒரே மாதிரியான முக பாவனைகளை வைத்திருப்பது சற்று சலிப்பைத் தட்டுகிறது.
காட்சிகளில் அழகாகவும் நடிப்பில் திறமையாவும் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். அதிலும் யாக மாறும் காட்சியில் நடிப்பில் மிரள வைத்துவிட்டார் லட்சுமி மேனன்.
சிம்ரன் மற்றும் லைலா இருவருக்குமே குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவான ஒரு நடிப்பை கொடுத்து நம்மை வெகுவாக கவர்ந்திருக்கின்றனர். அதிலும் லைலாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.
ஹாலிவுட் தரத்திற்கு ஒளிப்பதிவு கொடுத்து படத்தை பிரமாண்டமாகக் காட்டியிருப்பது படத்தின் ஒளிப்பதிவாளர் தான். ஒவ்வொரு காட்சிகளுக்கும் அப்படியான மெனக்கடலை கொடுத்து நம்மை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
படத்தின் ஒட்டுமொத்த பெருமைகளுக்கும் சொந்தக்காரராக மாறிவிட்டார் இசையமைப்பாளர் தமன். இவரின் பின்னணிஇசை தான் படத்திற்கு பெரும் பலமாக வந்து நிற்கிறது.
பின்னணி இசையில் அதிலும் லைலாவுக்கு இசைக்கப்பட்ட பிஜிஎம் வேற லெவல் தான். மனம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையும் ஒரு விதமான மருந்து தான் என்பதை இப்படத்தில் வெளிச்சமாக காட்டியிருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு மிகப்பெரும் பாராட்டுகளை கொடுத்துவிடலாம்.
திரைக்கதையினை இன்னும் சற்று தெளிவாக கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தது. படத்தொகுப்பு படத்தின் விறுவிறு காட்சியமைப்பிற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் இந்த சப்தம் ஒலிக்காக(சவுண்ட்) பார்க்கலாம்
Previous Post

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

Next Post

“’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்

Next Post

“’சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.