• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தக் லைஃப் (Thug Life) விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
June 6, 2025
in விமர்சனம்
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தக் லைஃப் (Thug Life) விமர்சனம் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , நாசர் , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , பகவதி பெருமாள் , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தில்லியில் பிரபல ரியல் எஸ்டேட் தாதாவாக இருக்கிறார் ரங்கராய சக்திவேல். எதிரி கும்பலுடன் நடக்கும் மோதலில் பேப்பர் போடுபவர் இறந்து விட அவரது மகன் அமரனை எடுத்து வளர்க்கிறார். இந்த கலவரத்தில் பிரிந்த அமரனின் தங்கையை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்கும் கொடுக்கிறார். வயதாகி கிட்டதட்ட ரிடையர்மெண்ட் நோக்கி நகரும் சக்திவேல் ஒருபக்கம் மனைவி அபிராமி இன்னொரு பக்கம் பாடகி இந்திராணியுடன் ரொமான்ஸ் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சக்திவேலுக்குப் பின் அமரன் தலைமை எடுக்க அவரைப் பார்த்து லேசாக பொறாமையும் கொள்கிறார். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து அமரனை தூண்டிவிட சக்திவேலை கொல்ல முயற்சிக்கிறார் அமரன். மீண்டும் உயிர்தப்பி வரும் சக்திவேல் அமரன் உட்பட ஒவ்வொருத்தராய் பழிவாங்குவதே தக் லைஃப் படத்தின் கதை.
Thug Life movie review: Kamal Haasan, Silambarasan's gangster drama soars, then sinks - India Today

நாயகன் படத்தில் தனது மக்களுக்காக சன்முறையை கையில் எடுக்கிறார் சக்திவேல். அதே வன்முறையால் உருவான பகையால் சக்திவேல் தனது மனைவி மகனின் உயிரை இழக்கிறார். தனது மகளை பிரிகிறார். இறுதியில் சுடப்படுகிறார். இத்தனையும் பார்த்த சக்திவேலின் குணாம்சங்களை அடிப்படையாக  வைத்துக் கொண்டு தக் லைஃப் படத்தில் ஒரு புதிய கதையை தொடர்கிறார் மணிரத்னம்.

ஆனால் நாயகன் படத்தில் இருந்த மைக்கதை , அதில் இருந்த உணர்ச்சிகளின் பேலன்ஸ் தக் லைஃப் படத்தில் மிஸ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டுன். ஒரு பெரிய கேங்ஸ்டர் அவருக்கு அடுத்தபடியாக அதிகாரத்திற்கு வர நடக்கும் சூழ்ச்சிகள் , தந்தை மகன் செண்டிமெண்ட் , திருமணத்தை தாண்டிய காதல் உறவு என மணிரத்னமின் முந்தைய படங்களின் சாய்கள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.

ஒருபக்கம் கமல் சிம்பு இருவருக்குமான உறவு இதில் மையக்கதையாக அமைகிறது
Thug Life box office collection Day 1: Rs 17 crore for Kamal Haasan film, fails to beat Indian 2 and Vikram - India Today

இன்னொரு பக்கம் கமல் –  த்ரிஷா  , கமல் – அபிராமி இடையிலான காட்சிகள் மணிரத்னமின் தனித்துவமான எழுத்தில் அமைந்துள்ளன.  ஆக்‌ஷன் எமோஷன் என முதல் பாதியில் சரியாக சென்றுகொண்டிருக்கும் படம் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ரிவெஞ்ச் படமாக மட்டுமே மாறிவிடுகிறது.

கமலின் நடிப்பு படத்தில் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் என்றே சொல்லலாம். பலமுறை பார்த்த காட்சிகள்தான் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவதொரு புதுமையை செய்து காட்சிகளை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறார். மறுபக்கம் சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஆனால் அவரது கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம். அபிராமி மற்றும்  த்ரிஷாவின் கதாபாத்திரம் வழக்கமான டெம்பிளெட் பெண் கதாபாத்திரங்களுக்குள் சுருக்கப்பட்டு விட்டது. சாக்லேட் பாயாக வந்த  அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியாக தோற்றம் முதல் நடிப்பு வரை பயங்கரமாக அப்டேட் செய்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் செக்க சிவந்த வானம் விஜய் சேதுபயின் கதாபாத்திரத்தை அச்சு அடித்தது போல் உள்ளது. ஐஸ்வர்யா  லக்‌ஷ்மி படத்தில் ஒரு முக்கியமான ட்விஸ்டாக மட்டும் பயண்படுத்த பட்டிருக்கிறார்.

நாசர் , ரமேஷ கண்ணா , வையாபுரி , ஜோஜூ ஜார்ஜ் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் படம் முழுவதும் தொடர்கிறார்கள்.

தக் லைஃப் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ஏற்கனவே பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில் இந்த பாடல்களுக்கு திரையரங்குகளில் பெரிய வரவேற்பு உள்ளது. எல்லா பாடல்களும் முழுவதுமாக இடம்பெறாமல் காட்சிகளுடன் சிறிய பகுதிகளாக இடம்பெற்றுள்ளன. கதையை மீறாத வகையில் பின்னணி இசை கோர்த்துள்ளார் ரஹ்மான். முத்த மழை பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து படத்தில் இடம்பெறாதது ஏமாற்றமே.
Kamal Haasan's 'Thug Life' Trailer Drops, Sparks Buzz

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் சண்டைக் காட்சிகளில் துல்லியமாகவும் எனோஷனலான காட்சிகள் மிக நிதானமாகவும் கேமராவை கையாண்டிருக்கிறார். வயதாகி வரும் கமலின் முதிர்ச்சியை அச்சு பிசகாமல் கொண்டு வந்திருக்கிறார்.

நாயகன் படம் உருவாக்கிய எதிர்பார்ப்போடு படம் பார்த்தால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். முதல் பாதியில் கேரக்டரை உருவாக்கவும் ஒவ்வொரு எமோஷனையும் சொல்ல பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்ட மணிரத்னம் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே லாஜிக்கை எல்லாம் கைவிட்டு அவசர கதியில் கதை சொல்லிவிட்டு செல்கிறார். மரணம் வரை சென்று கமல் மர்ம கலையை கற்றுக் கொண்டு சண்டை போடும் காட்சிகள் நம்பகத் தன்மையோடு சுத்தமாக இல்லை. இதனால் அடுத்தடுத்து நடக்கும் காட்சிகள் மீது எதிர்பார்ப்பு குறைந்தபடியே செல்கிறது.

மணிரத்தினம் தெரிந்து இந்த படத்தை இயக்கினாரா இல்லை அவரது உதவியாளர் இயக்கினாரா என்ற சந்தேகம் பல இடங்களில் தெரிகிறது.

மொத்தத்தில் 38 வருட  இந்த கூட்டணி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு வைத்திருக்கிறார்கள் ஆப்பு.
Previous Post

பேரன்பும் பெருங்கோபமும் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

மெட்ராஸ் மேட்னி - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.