• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

by Tamil2daynews
June 6, 2025
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மெட்ராஸ் மேட்னி –  விமர்சனம் 

காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் ஒரு அழகான வாழ்வியல் தான் இந்த மெட்ராஸ் மேட்னி.காளி வெங்கட்டின் மனைவியாக வருகிறார் ஷெல்லி, மகளாக வருகிறார் ரோஷ்னி மற்றும் மகனாக வருகிறார் விஷ்வா.சென்னையில் ஆட்டோ வைத்து அதனை வைத்து தனது குடும்ப வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்பவர் காளி வெங்கட். மகளை நன்றாக படிக்க வைத்துவிடுகிறார். ரோஷ்னி பெங்களூருவில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மகன் விஷ்வா, 12ஆம் வகுப்பு முடிந்து கல்லூரியில் சேர காத்துக் கொண்டிருக்கிறார்.

தனது மகளுக்கு வரன் பார்த்து வருகிறார் காளி வெங்கட். ஆனால், அவருக்கு எந்தவொரு வரணும் சிக்காமல் தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்கிறது. தன்னுடைய குடும்ப கஷ்டத்தை மகள் மீது வைத்ததால் தான் இப்படி தனது மகள் தவிக்கிறாள் என்று நினைத்து கவலை படுகிறார் காளி வெங்கட்.
Trailer [OV]

தனது அப்பா எல்லோரிடமும் மிகவும் தாழ்ந்து பேசுவதையும் நடந்து கொள்வதையும் பிடிக்காத விஷ்வா, அப்பா மீது ஒருமாதிரியான கோபத்தில் இருந்து வருகிறார்.

என்ன நடந்தாலும், தன் குடும்பத்தை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவாக ஷெல்லியும் இருக்க..இப்படியாக இருக்கும் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.இந்த கதாபாத்திரத்தில் இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகர் காளி வெங்கட். இவரைப் பார்த்தாலே அனைவருக்கும் தங்களது அப்பாவின் வாசனை வந்து செல்லாமால் இருக்காது. அப்படியாக அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

நடிகை ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார். மகனாக நடித்திருக்கும் விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், அப்பாவை புரிந்து கொள்ளும் தருணம் என பல இடங்களில் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்து நடிப்பில் தனி ஒரு அங்கீகாரம் பெற்றிருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஷெல்லியும் கண்களில் வரும் ஈரத்துளிகளிலே ப்பாதி நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார்.

காளி வெங்கட்டின் நண்பராக வருபவர், கட்சிக்காரராக வரும் கீதாகைலாசம், விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, ஊறுகாய் விற்கும் சாம்ஸ், HR ஆக வரும் அர்ச்சனா, ட்ரைவிங் கற்றுத் தரும் ஜார்ஜ் மரியன், EB அலுவலர் என அனைவருமே தங்களது கேரக்டர்களை மிகவும் சரியாக செய்திருக்கின்றனர்.
Madras Matinee Set for Worldwide Release on June 6 – Latest Tamil Telugu Cinema News Reviews Stills

காமெடிகளை ஆங்காங்கே சிதறவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர். காளி வெங்கட் கார் ஓட்டி பழகும் காட்சி, முதல் பாதியில் இருந்த குறைகள், முடிவடையாத க்ளைமாக்ஸ் என ஒரு சில இடங்களை இயக்குனர் இன்னும் சற்று நன்றாகவே கூர்ந்து கவனித்திருந்திருக்கலாம்.அதிலும், பெரிய குறை என்னவென்றால் சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே. படத்திற்கு துளியளவு இவரது கதாபாத்திரம் ஒட்டவில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு அழகான வாழ்வியலைம், அட ஆமால்ல இந்த மாதிரி எனக்கு நடந்திருக்கே என பல இடங்களில் நம்மை நாமே பார்க்கும்படியான காட்சிகள் பல படத்தில் உண்டு. இம்மாதிரியான காட்சிகளை உயிரோட்டமாக கொடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.Madras Matinee Set for Worldwide Release on June 6 – Latest Tamil Telugu Cinema News Reviews Stills
வடிவேலு குரலில் வந்த பாடல் ரசனை. பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது. ஒளிப்பதிவு நம்மை கதையின் உலகத்திற்குள் கூட்டிச் சென்றிருக்கிறது.சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் திரைக்கதையில் தடுமாறுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில் மெட்ராஸ் மேட்னி காலை காட்சி.
Previous Post

தக் லைஃப் (Thug Life) விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

பரமசிவன் பாத்திமா – விமர்சனம் ரேட்டிங் – 3 .5 / 5

Next Post

பரமசிவன் பாத்திமா - விமர்சனம் ரேட்டிங் - 3 .5 / 5

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.