• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
July 19, 2025
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம்

கர்ப்பமாக இருக்கும் கதாநாயகிக்கு அமானுஷ்யமான விஷயங்கள் கவனில் தொடர்ந்து வருகிறது. காதநாயகன் சினிமாவில் நல்ல இயக்குனர் ஆகவேண்டும், தனது முதல் படத்தை தான் நினைத்தது போல் எடுக்க வேண்டும் என போராடி கொண்டு இருக்கிறார்.

இவர்களின் கதை ஒரு புறம் நகர, மறுபக்கம் ஒரு பிரபல அரசியல்வாதியிடம் வேலை செய்யும் காளி வெங்கட்கின் மகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது. இந்த பணத்தை அரசியல் வாதியிடம் கேட்கும் காளி வெங்கட்டுக்கு அவமானம் ஏற்படுகிறது.Jenma Natchathiram review. Jenma Natchathiram Tamil movie review, story, rating - IndiaGlitz.com

இதனால் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுகிறார் காளி வெங்கட். இதனால அந்த அரசியல்வாதியின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்பு கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு, தனது மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு இறந்து விடுகிறார்.

ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். அங்கு எதோ ஒரு அமனுஷ்யத்தால் ஒவ்வொருவாக மரணிக்கின்றனர். இதற்கு எல்லாம் யார் காரணம், யார் இந்த கொலைகளை செய்கிறது, தேடி சென்ற பணம் கிடைத்ததா இல்லையா? அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதா என்பதே படத்தின் மீதி கதை..

கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. பரபரப்பு நிறைந்த சூழலை தங்களது நடிப்பின் மூலம் திரையில் சிறப்பாக காட்டியுள்ளனர். நடிகர் மற்றும் நடிகைகளின் நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை.
Jenma Natchathiram review. Jenma Natchathiram Tamil movie review, story, rating - IndiaGlitz.com

ஆங்கிலத்தில் வெளிவந்த ஓமன் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ஜென்ம நட்சத்திரம். அதனை தமிழ் ஆடியன்ஸுக்கு பிடிப்பது போல், எமோஷ்னளுடன் கலந்த ஹாரர் ட்ராமாவாக இப்படத்தை சிறப்பாக திரையில் வழங்கியுள்ளார் இயக்குநர் மணிவர்மன்.

சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், அது பெரிதாக திரைக்கதையை பாதிக்கவில்லை. அதே போல் கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏனென்றால் இப்படி ஒரு கதைகளத்திற்கு கண்டிப்பாக நல்ல கிராபிக்ஸ் இருந்திருந்தால் படம் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.

கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பு. விருவிறுப்பான திரைக்கதை, திகில் மூட்டும் ஹாரர் மூவ்மெண்ட்ஸ், சாத்தன் குறித்து காட்டப்பட்ட திகில் காட்சிகள் அழகாக படத்தை வடிவமைத்துள்ளார்.

இவை அனைத்தையும் பின்னணி இசை இன்னும் வலுவாக்கியுள்ளது. ஹாரர் படங்கள் என்றாலே பின்னணி இசை தான் இரண்டாவது ஹீரோ. அதை இப்படத்தில் சிறப்பாக செய்துள்ளார் இசையமைப்பாளர் சஞ்சய். சவுண்டு எபெக்ட், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் திரில்லர் ஹாரர் விரும்பிகளுக்கு சிறப்பான விருந்தாக அமையும் இந்த ஜென்ம நட்சத்திரம்.
Previous Post

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

Next Post

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

கெவி - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.