• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
July 25, 2025
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தலைவன் தலைவி – விமர்சனம் 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பப் படங்களை இயக்கும் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தலைவன் தலைவி.

குடும்பத்துடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதிக்கும் (ஆகாச வீரன்), நித்யா மேனனுக்கும் (பேரரசி) திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.  இதன்பின் இருவரும் பழகி புரிந்துகொண்டு காதலிக்க துவங்கும்போது, விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, அவருடைய தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, நித்யா மேனன் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்துவிட்டனர்.

ஆனால், தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்கிறார் நித்யா மேனன். திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்க, விஜய் சேதுபதியின் தந்தை சரவணன், தனது மருமகள் நித்யா மேனனை ஹோட்டல் கல்லா பெட்டியில் அமர்ந்து கணக்கை பார்த்து கொள்ள சொல்கிறார்.

இதுநாள் வரை அதனை பார்த்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதியின் அம்மாவுக்கு புதிதாக வந்த மருமகள் தனது இடத்தை பிடித்து விட்டால் என்கிற ஈகோ ஏற்படுகிறது. அதே போல் இதுநாள் வரை தனது பெயரை ஹோட்டல் இருந்தது, ஆனால், தற்போது தனது மனைவி பெயரில் ஹோட்டலை மாற்றியதால், விஜய் சேதுபதியின் தங்கைக்கும் கோபம் வருகிறது.
Vijay Sethupathi-Nithya Menen's film titled 'Thalaivan Thalaivii'; title teaser out - The Hindu

இதனால் அம்மாவும் மகளும் சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் போல் நடத்த, இதை நித்யா மேனன் அம்மா பார்க்க பெரும் சண்டை விஜய் சேதுபதிக்கும் – நித்யா மேனனுக்கும் இடையே வெடிக்கிறது. ஒரு நாள் சண்டை என்றால் மறுநாள் இணைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது.

இப்படி பிரிவதும் சேர்வதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் நேரத்தில், விஜய் சேதுபதிக்கு வேறொரு திருமணம் செய்து வைப்பதாக வரும் செய்தியை நித்யா மேனன் அறிந்து விடுகிறார். இதனால் பெரும் சண்டை வெடித்து, இருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஆனால், எப்படியாவது இணைந்து விட மாட்டோமா என இருவரும் தவிக்க, குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வு கோயிலில் நடக்கிறது.

தந்தை எனக்கே தெரியாமல் என் மகளுக்கு முடி எடுக்கிறீர்களா என கோபத்துடன் விஜய் சேதுபதி கோயிலுக்கு செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகி நித்யா மேனன் இருவருமே தங்களது நடிப்பில் மிரட்டிவிட்டனர். உண்மையாகவே ஒரு கணவன் மனைவிக்கு இடையே எப்படி சண்டை வந்தால் நடந்து கொள்வார்களா அதே போல் திரையில் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். மொத்த படத்தையும் இருவரும் இறுதி வரை சுமந்து செல்கிறார்கள். ரொமான்ஸ், சண்டை, டான்ஸ், நகைச்சுவை என அனைத்திலும் இந்த ஜோடி வேற லெவலில் கலக்கியுள்ளனர்.

அதே போல் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக தீபா, சற்று வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். இவர்கள் அனைவரையும் தாண்டி படத்தை வெற்றிகரமாக தனது நகைச்சுவையின் மூலம் கொண்டு செல்கிறார் யோகி பாபு.
Thalaivan Thalaivii Teaser: Vijay Sethupathi and Nithya Menen Have A Love-Hate Relationship Director Pandiraj's Film | Tamil - Times Now

இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை சிறப்பான திரைக்கதையோடு திரையில் வழங்கியுள்ளார். சில இடங்களில் ‘என்னடா இது’ என்பது போல் சலிப்பு ஏற்பட்டாலும், நகைச்சுவை நம்மை தேற்றிவிடுகிறது. அதுவே படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.

அதே போல் சில காட்சிகள் நம்முடன் கனெக்ட் ஆகவில்லை. அதற்கு காரணம் பின்னணி இசையாக கூட இருக்கலாம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பெரிதாக படத்திற்கு உதவவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய பின்னணி இசை நன்றாக இருந்தாலும், அது இந்த படத்திற்கு செட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொட்டல முட்டாயே பாடலை தவிர்த்து வேறு எந்த பாடலும் மனதிலும் பதியவில்லை. ஆனால், பொட்டல முட்டாயே பாடலை கம்போஸ் செய்த விதம் சூப்பர்.

இயக்குநர் பாண்டிராஜ் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான, வலுவான வெயிட்டேஜ் கொடுத்துள்ளார். அதனை ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளும் சிறப்பாக எடுத்து செய்துள்ளனர். அதே போல் திரைக்கதையை வடிவமைத்த விதமும் ரசிக்க வைக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு விவாகரத்து முடிவு அல்ல, அதை தாண்டியும் உறவு உள்ளது என்பதை இப்படத்தில் கூறியுள்ளார். அதனை அழகான காட்சிகளோடு திரையில் வழங்கிய விதம் சிறப்பு.

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை என்றால், அது அவர்களுடைய வாழ்க்கை அவர்களே பார்த்து கொள்வார்கள், சொந்தக்காரர்கள் யாரும் இடையில் வராமல் இருந்தாலே போதும் என கூறிய கருத்து படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. விஜய் சேதுபதியின் வீடு மற்றும் ஹோட்டல், நித்யா மேனனின் வீடு, பாண்டி முனீஸ்வரர் கோவில் என அனைத்தையும் மிகவும் அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம். சுகுமார். அதே போல் எடிட்டிங் படத்திற்கு மிகவும் அளவில் உதவியுள்ளது. மற்ற டெக்னீகளான விஷயங்களிலும் பெரிதாக எதுவும் குறையில்லை.

படத்தின் சொல்லக்கூடிய குறைகள் என்றால் கதைக்கு துளி அளவு செட் ஆகாத சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை.

ஒரு சில காட்சிகள் பழைய படங்களை ஞாபகப்படுத்தி இருந்தாலும் விஜய் சேதுபதி நித்யா மேனனின் அபார நடிப்பு அதை மறக்க செய்கிறது.

யோகி பாபு காமெடி மூலம் இந்த படம் நிமிர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் இந்த தலைவன் தலைவி பெயருக்கு தகுந்தது போல்
Previous Post

ஹரிஹர வீரமல்லு- விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மஹா அவதார் நரசிம்மா – விமர்சனம்

Next Post

மஹா அவதார் நரசிம்மா - விமர்சனம்

Popular News

  • ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.