• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

போகி – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

by Tamil2daynews
August 2, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
போகி – விமர்சனம் 

வசதிகள் குறைவான வனப்பகுதியில் வாழும் மக்கள் கல்வியில் சிறந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நகர்ப்புறம் வரும்போது இங்குள்ள நாகரிகம் அவர்களை எப்படி சிறுமைப்படுத்துகிறது என்பதை தற்கால நிஜ நிகழ்வுகளோடு கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ்.

தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி.

பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த ஊரே அறிந்து வைத்திருக்கிறது. வளர்கிற பொழுதில் தங்கையைத் தாண்டி இன்னொரு பெண்ணின் மீதும் அன்பு போகிறது அவருக்கு.

அது பதின் பருவக் காதலாக இருக்கும் நிலையில் அந்த ஊரை விட்டு அவள் செல்ல நினைவுப் பரிசினை அவளிடம் கொடுத்து நினைவை மட்டும் பத்திரப்படுத்தி கொள்கிறார் நபி நந்தி.

வளர்ந்த பொழுதில் பள்ளி மேல்நிலைத் தேர்வில் சுவாசிகா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக வெற்றி பெற மருத்துவ வசதி இல்லாத தன் கிராமத்துக்கு அதைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பட்டணத்துக்கு சென்று மருத்துவம் பயில ஆரம்பிக்கிறார்.

நபி நந்தியின் பதின் பருவ காதலி இப்போது பூனம் கவுராக வளர்ந்து நிற்க, அந்தக் காதல் துளிர்க்கும் சாத்தியமும் அதிகரிக்கிறது.

ஆனால் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஒரு குற்றம் ஒன்று இவர்கள் அத்தனை பேரின் வாழ்வையும் புரட்டிப் போடுகிறது. அது என்ன… அவற்றின் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை..!

பட்டணத்துக்கு வந்து சேர்ந்தாலும் ஒரு கிராமத்து மனிதனாகவே நபி நந்தி தோற்றமளிக்கிறார். தங்கை மீதான பாசத்தில் பாசமலரையே மிஞ்சுகிறார். அப்படிப்பட்ட தங்கைக்கு நேர்ந்த அநீதி கண்டு அவர் பொங்குவது நம்ப வைக்கிறது.

எப்படிப்பட்ட வேடம் ஆனலும் அதில் தன்னை எளிதாக பிணைத்துக்கொள்ளும் சுவாசிகா இந்தப் படத்தின் சுவாசமாகவே மாறி இருக்கிறார். கிராமத்தில் சாமி வந்ததாக நம்ப வைத்து குடிகாரனை திருத்துவதில் தொடங்கி, படிக்கும் கல்லூரியில் அநீதி கண்டு பொங்கி வில்லனின் கொடுமைக்கு இலக்காவது வரை சுவாசிகா மலைக்க வைக்கிறார்.

‘ நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறார் மொட்ட ராஜேந்திரன். இப்போதெல்லாம் அவரைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அதை அப்படியே புரட்டிப் போட்டு அவரைப் பார்த்தாலே பயம் கொள்ள வைக்கிறது இதில் வரும் வேடம்.

சுவாசிகாவை மணக்க விரும்பி வித்தியாசமாக அதை செயல்படுத்தும் சரத், சுவாசிகாவுக்கான நீதிக்காக நபி நந்தியுடன் கைகோர்ப்பது நன்று.

இன்ஸ்பெக்டராக வேல ராமமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியராக சங்கிலி முருகன், ஒரு சிறிய வேடத்தில் எம் எஸ் பாஸ்கர் வந்து போகிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களில் முதல் பாராட்டு பெறுவது ஒளிப்பதிவாளர் ராஜா. சி சேகர்தான். காண்பதற்கே மூச்சு வாங்கும் அந்தக் கடினமான மலைப்பகுதியில் கேமராவை இங்கும் அங்கும் தூக்கிக் கொண்டு பறந்து இருக்கிறார் மனிதர்.

பட்டணத்துக்கு வந்த பின்பும் அந்த சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கி இருப்பதில் வெல்டன் ராஜா…!

இரண்டு காட்சிகள் முடிந்தால் ஒரு பாட்டு வந்துவடுகிறது. அந்த அளவுக்கு பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தில் தன் முத்திரையை பதிக்கிறார் இசை அமைப்பாளர்.

மார்ச்சுவரியில் வைத்து இளம் பெண்களுக்கு நேரும் கொடுமை, எங்கும் நிறைந்திருக்கும் சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களால் நேரும் ஆபத்து, பிணவறையில் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளை லோக்கல் கடைகளில் சர்பத்துக்காக விற்கும் கொடுமை என்று நாட்டில் நாம் கேள்விப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் இந்தக் கதைக்குள் வைத்திருக்கும் இயக்குனர் விஜய் சேகரன் பாராட்டுக்குரியவர்.

ஆனால் காட்சிகளுக்குள் ஒரு தொடர்பில்லாத தன்மை தொடர்ந்து கொண்டே இருப்பது தெளிவான கதை ஓட்டத்துககு நெருடலாக அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட எந்த ஒரு விஷயமும் முடிவுக்கு வந்ததாகவே உணரப்படவில்லை.

படத்தின் முடிவு கூட எதிர்பாராத இடத்தில் பட்டென்று முடிந்து இரண்டாவது பாகத்தில் தொடர்வதாக வருகிறது.

அந்த இரண்டாவது பாகத்திலாவது இந்த நெருடல்கள் இல்லாமல் படமாக்கினால் பாராட்டுகள் குவியும்..

மொத்தத்தில் இந்த போகி மார்கழிக்கு மட்டுமே பொருந்தும்.
Previous Post

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

Next Post

ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

ஹவுஸ் மேட்ஸ் - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.