• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வீரவணக்கம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
August 31, 2025
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வீரவணக்கம் – விமர்சனம் 

சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், சுதீஷ், வி.கே.பைஜு, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மே​தினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் பி. கிருஷ்ண பிள்ளையின் புரட்சிகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் வீரவணக்கம். ஒரு தமிழ் கிராமத்தின் சமூக-அரசியல் போராட்டங்களை ஆராய்கிறது. தமிழக எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் ஊர் மக்கள் அனைவரிடமும் ஏழை மற்றும் சாதி வேறுபாடு பார்க்காமல் அவர்களிடம் அன்புடன் பழகி அவர்களுக்கு உதவிகள் செய்து வரும் கம்யூனிச கொள்கையுடைய செல்வந்தர் பரத். அதே நேரத்தில் அருகில் உள்ள பண்ணையில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஏற்படும் வன்கொடுமை, தொழிலாளர்கள் அடிமைத்தனம் என மேல்ஜாதி முதலாளிகளால் ஊர் மக்கள் கொடுமை படுத்த படுகின்றனர். செல்வந்தர் பரத் அந்த மக்களுக்கு துணையாக நின்று, தங்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் மற்றும் அநீதியை தட்டிக் கேட்டு, பிரச்சனைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்து கூறி, அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று 1940 களில் கேரளாவில் ஜமீன்தார்களால் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்து தோழர் பி. கிருஷ்ண பிள்ளையுடன் இணைந்து போராடிய 94 வயதுள்ள முதுபெரும் பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினியை சந்திக்கிறார்கள். அவரிடம் கிருஷ்ண பிள்ளையின் போராட்ட வரலாற்றை பற்றி கூறும்படி கேட்கிறார். அதை ஏற்று, 1940 களில் கேரளாவில் இருந்த சாதி பாகுபாடுகள், மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து அந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய தோழர் பி.கிருஷ்ணபிள்ளை, கேரளாவில் கமியூனிசத்தின் எழுச்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியது முதல், 1948ம் ஆண்டு தனது 42வது வயதில் அவர் பாம்பு கடித்து காலமானது வரை தோழரின் வாழ்க்கை வரலாற்றை முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மேதினி அவர்கள் விவரிப்பதே‘வீரவணக்கம்’ படத்தின் கதை.

தோழர் கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வு சமுத்திரக்கனி. இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, அவர் கிருஷ்ண பிள்ளையின் பாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
Can Veeravanakkam Surpass Viduthalai in Popularity and Impact - Tamil News - IndiaGlitz.com

இ.எம்.எஸ்.நம்பூதிர்பாடு (சுதீஷ்), ஏ.கே.கோபாலன் (வி.கே.பைஜு) மற்றும் ரைரு நம்பியார் (ரித்தேஷ்), பரத், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா உட்பட அனைவரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

94 வயது முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மேதினி அவர்கள் படத்தின் கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.|

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான பங்களிப்பு மூலம் மாநிலத்தில் ஒரு சிவப்பு புரட்சியை ஏற்படுத்திய ஒரு அரசியல் மற்றும் கலாச்சார இயக்கத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர்.
പി കൃഷ്‍ണപിള്ളയുടെ ജീവിതം ബിഗ് സ്ക്രീനില്‍; 'വീരവണക്കം' ട്രെയ്‍ലര്‍ എത്തി | Veera Vanakkam Tamil Movie Trailer Samuthirakani | Asianet News Malayalam
வீரவணக்கம் என்பது ஒரு கிராமத்தில் உயர் சாதியினராலும் செல்வந்தர்களாலும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இழைக்கப்படும் அநீதி, ஆண்கள் தரையில் மிதிக்கப்படுவது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றிய படம். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள் மற்றும் நீதிக்கு எதிராக போராடி, தனிநபர்களாகவோ அல்லது அரசியல்வாதிகளாகவோ தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்திற்கான போராட்டத்தில் குதித்த அரசியல் ஆர்வலர்கள் பி.கிருஷ்ணபிள்ளை, காங்கிரஸ் இயக்கத்திலிருந்து கம்யூனிசத்திற்கு எவ்வாறு மாறினார் என்பதற்கான வரலாற்றுப் பயணத்தில் அவருடன் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மற்றும் ஏ.கே.கோபாலன் போன்ற முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இணைந்து கேரளாவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த பரந்த இயக்கத்தையும் பற்றிய வரலாற்றுப் பயணமாகும். இயக்குனர் அனில் வி.நாகேந்திரன், அவர்களைப் பற்றிய ஒரு புரட்சிகர வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்கியுள்ளார்.மொத்தத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தேசபக்தனுக்கு ஓர் வீர வணக்கம்.
Previous Post

சென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

Next Post

‘கோலி சோடா’ வெற்றிப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அடுத்த பை-லிங்குவல் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு;

Next Post

‘கோலி சோடா’ வெற்றிப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அடுத்த பை-லிங்குவல் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு;

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.