தமிழ் சினிமாவில் நடித்து சம்பாதித்து எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருக்கும் மத்தியில் சிறுவயதில் மக்களுக்கு உதவும் எண்ணத்தில் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக திகழும் விஜய் டிவி பாலாவை வாழ்த்தி அவர் நடித்த முதல் தமிழ் படமான காந்தி கண்ணாடி விமர்சனத்தை பார்ப்போம்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் எவ்வளவோ திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது.
காந்தி கண்ணாடி இந்த படத்தில் பாலா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அவருக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகநாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏன் கதையின் நாயகன் பாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் ஊர்வசி அர்ச்சனாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மற்றும் இந்த படத்தில் பலர் நடித்திருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் செரிப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் காந்தி கண்ணாடி .
பாலாஜி சக்திவேல் அர்ச்சனா இவர்கள் இருவரும் இளமைதில் காதலிக்கிறார்கள் பாலாஜி சக்திவேல் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் ஊர்வசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஏழ்மையான பெண்.
ஒவ்வொருவரின் புரிதல் தான் அவர்களின் வாழ்க்கை சரியான முறையில் அமையும் என்பதை மிகவும் அழுத்தமாக ஆழமாக உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் தான் காந்தி கண்ணாடி காதல் ஒரு அழகிய கண்ணாடி அதை இன்றைய காலத்தில் பல சரியாக பயன்படுத்தாமல் வாழ்க்கையில் தவற விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த படம் ஒரு பாடம் என்று கூட சொல்லலாம்.
பணம் பணம் என்று ஓடும் மனிதர்களிடம் குடும்ப பங்களிப்பு என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது அப்படி இருந்தால் வாழ்க்கை எப்படி முடியும் என்பதையும் இந்த படம் உணர்த்துகிறது.
பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இந்த இருவர் மட்டும் தான் இந்த படத்தை தாங்கி நிற்கிறார்கள். இவர்கள் நடிப்பு கதாபாத்திரம் திரையில் பார்க்கும்போது இவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தம்பதியினருக்கும் ஏற்படும்.
நிச்சயம் இந்த இருவருக்கும் தேசிய விருது உறுதி.
நாயகனாக அறிமுகமாகும் பாலா அவர் உண்மையான கதாபாத்திரத்தில் இருந்து இதில் மாறுபட்டு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாக பாலா உண்மை வாழ்க்கையில் தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு 90% கொடுப்பவர் ஆனால் இந்த படத்தில் பாலா பணம் மட்டுமே முக்கியம் என்று வாழ்கிறார் (காரணம் படத்தின் கதைக்களம் அப்படி)
நமிதா கிருஷ்ணமூர்த்தி அறிமுக நாயகி பாலாவுடன் நடிக்க முழு மனதுடன் சம்மதித்து தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று சிறப்பான நடிப்பு மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாலாவிடம் தன் காதலுக்காக சண்டை போடும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பின் மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்கள்.
விவேக் மேர்வின் இசையில் பாடல்களும் சரி பின்னணி செய்யும் சரி மிக அற்புதமாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு காட்சிகளையும் வசனங்களையும் செதுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு ஒரு சிறப்பான ஒரு உணர்வுபூர்வமான உணர்ச்சிகரமான ஆழமான அழுத்தமான ஒரு கதையை நமக்கு பரிசு கொடுத்து இருக்கிறார். இயக்குனர் ஷெரிப்.
மொத்தத்தில் பல விருதுகளை வாகை சூட போகும் இந்த காந்தி கண்ணாடி பட குழுவினற்க்கு வாழ்த்துக்கள்.
KPY பாலா தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.








