• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பிளாக்மெயில் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 12, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிளாக்மெயில் – விமர்சனம் 

 

ஜிவி பிரகாஷ் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் விறுவிறுப்பான வெற்றிப்படம் என்றே சொல்லலாம் இந்த பிளாக்மெயில் திரைப்படத்தை.சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது ஐம்பது லட்சம் மதிப்புள்ள போதை மருந்து என்று தெரிகிறது.இதனால் கோபமடைந்த ஜி.வியின் முதலாளி முத்துக்குமார் தேஜுவைக் கடத்தி வைத்துக்கொண்டு காணாமல் போன போதைப்பொருள் அல்லது ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு காதலியை அழைத்துப் போகலாம்… அல்லது அவளை வெளிநாட்டு பாலியல் தொழிலுக்கு விற்று விடுவதாகச் சொல்ல, நண்பன் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்துக்கு முயற்சி செய்கிறார் ஜி. வி.

அதேநேரம் பல பெண்களைக் காதலித்து கழற்றி விட்டு அவர்களுக்கு திருமணமானவுடன் அவர்களின் நெருக்கமான படங்களை வைத்து பிளாக்மெயில் செய்யும் லிங்கா, அப்படி தொழிலதிபர் ஶ்ரீகாந்தின் மனைவியான பிந்துமாதவியிடம் இரண்டு கோடிப் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறார்.அது தொடர்பாக அவர்களின் குழந்தையைக் கடத்தும் திட்டம் போட்டு, அந்த வேலையைப் பணத்துக்காக அலையும் ஜி.வி, ரமேஷ் திலக்கிடம் கொடுக்கிறார்.இப்படி சூழ்நிலையால் குற்றம் செய்யப் புறப்படும் இவர்களின் திட்டம் என்ன ஆனது என்பதுதான் மீதி.ஜி.வியின் தோற்றத்துக்கும், அப்பாவித் தனத்துக்கும் ஏற்ற பொருத்தமான வேடம். அவர் அந்தப் பாத்திரத்தை ஏற்றதாலேயே அவரைக் குற்றவாளியாகப் பார்க்க முடியவில்லை.ஆனால், நாயகி தேர்வுக்குதான் பாவம். காதலிக்கவோ, டூயட் பாடவோ வேலையின்றி கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளிலும் அழுகாச்சியாக வருகிறார்.Blackmail' trailer: GV Prakash, Srikanth unravel secrets in a twisted tale of lies - The Hindu

ஒரு புனிதனாகவே நம் மனதில் இடம் பெற்றுவிட்ட ரமேஷ் திலக்கும் அந்த நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.இன்னொரு நாயகனாக இருக்கும் ஶ்ரீகாந்த், அவர் நேரடி நாயகனாக வந்த படங்களைக் காட்டிலும் நன்றாக நடித்திருக்கிறார்.பிந்து மாதவியும் குணச்சித்திர வேடத்தில் அழகாகப் பொருந்தியிருக்கிறார்.அவர்களின் குழந்தையும் கியூட். ஆனால், அது எத்தனை பேரின் கைகளுக்கு மாறிப் போகிறது என்பதைப் போட்டியே வைக்கலாம்.ஆனால், ஒவ்வொரு கை மாறும்போதும் அது பாதுகாப்பாகவே இருப்பதில் நம் மனது ஆறுதல் பெறுகிறது.வில்லத்தனத்தைத் தாண்டி லிங்காவுக்கு வேறு வேலையும் கொடுத்திருக்கலாம். ஒளிப்பதிவும், இசையும் பக்காவாகப் பொருந்தி படத்தின் பரபரப்புக்கு உதவுகிறது.இருக்கும் பாத்திரங்களுக்கு உள்ளேயே பிரச்சினை இடம் மாறி மாறிப் போக, ஒருவரை ஒருவர் துரத்த இயக்குனர் நிறைய வேலை பார்த்திருக்கிறார்.இடைவேளைக்கு முன் வரும் இருபது நிமிடங்கள் mis பண்ணக் கூடாத மின்னல் வேகத் திரைக்கதை.சற்றும் எதிர்பாராத தனது திரைக்கதையால் சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர் மாறன்.மொத்தத்தில் இந்த பிளாக் மெயில் கிரைம் பிரிர்களுக்கு பிரியாணி விருந்து

Previous Post

குமாரசம்பவம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது

Next Post

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.