• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

by Tamil2daynews
January 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

 

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு  முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது  Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது.

முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும் பொழுது,
“‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

தயாரிப்பாளர் K.V. சபரீஷ் கூறும் பொழுது,
“இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு  பணிபுரிந்து  நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். Post production  பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

தொழில்நுட்பக் குழு

கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன்

திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்

ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம்

எடிட்டிங்: வி. பூபதி

இசை & பின்னணி இசை: தர்புகா சிவா

கலை இயக்கம்: அன்பு

மேக்கப்: குப்புசாமி

உடை வடிவமைப்பு: ரமேஷ்

தயாரிப்பு நிர்வாகம்: மாரியப்பன் மற்றும் குட்டி கிருஷ்ணன்

மக்கள் தொடர்பு: ரேகா

Post production பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘லகட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஒரு வலுவான, சமூகப் பொறுப்புள்ள திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

Previous Post

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

Next Post

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

Next Post

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.