• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!

by Tamil2daynews
April 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழினி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!

 

துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பனையேறி” குறும்படத்தை தயாரித்த திசையன்விளையை சேர்ந்த D. P. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர், அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது “தமிழினி” என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் “தலைவன் தலைவி” புகழ் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், சத்ரியன் படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சன் மியூசிக் தொகுப்பாளரும், பிரபல YouTuber-உம் ஆன VJ ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், “ராயல் சல்யூட்” படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.

கதாநாயகிகளாக “ரத்னம்”, “டீசல்” படத்தில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் “அன்பெனும் ஆயுதம்” வெப்சீரிஸ் புகழ் புஷ்ப லதா நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் D. P. சரவணனும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“பனையேறி” குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த இந்த படக்குழு, “தமிழினி” திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் G. V. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். மேலும் சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவை Scene No.62 பட புகழ் விஜய் வெங்கட் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பை இயக்குநர் கணேஷ் மூர்த்தியே செய்துள்ளார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், “தமிழினி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பட்டியல் (Cast)

* தீபா சங்கர்
* VJ ஆசிக்
* பிரதீப் ராஜ்
* வின்சென்ட் ராய்
* திருப்பாச்சி பெஞ்சமின்
* ஷாஷா சிவகுமார்
* S. புஷ்ப லதா
* D. P. சரவணன்

தொழில்நுட்பக் குழு (Technical Crew)
தயாரிப்பு நிறுவனம்
SABARI CINE ENTERTAINMENT

தயாரிப்பாளர்கள்
D. P. சரவணன்
விஜிலா சரவணன்

இயக்குநர்
கணேஷ் மூர்த்தி

இணை தயாரிப்பாளர்கள்
மும்பை கணேசன்
செங்குளம் கணேசன்

கதை & வசனம்
தேவா
கணேஷ் மூர்த்தி

இசை
சந்தோஷ் பாலாஜி

ஒளிப்பதிவு
விஜய் வெங்கட்

படத்தொகுப்பு
கணேஷ் மூர்த்தி

ஒலிப்பதிவு (Audiography)
சுக வேந்தன் V.P

ஸ்டண்ட் இயக்கம்
எழில் வேந்தன்

பாடகர்கள்
G. V. பிரகாஷ் குமார்
சைந்தவி
சிவாங்கி
சந்தோஷ் பாலாஜி
சம் விஷால்

காஷ்டியும் டிசைனர் (Costume Designer)
ஏஞ்சல் லாரன்ஸ்
சுபாஷினி

VFX கிரியேட்டிவ் ஹெட்
ஸ்ரீராம் செந்தில்குமார்

DI Head
பரத் சிவராஜன்

Colourist
பரணிதர்

Assistant Colourist
A. அஜீத்குமார்

மேக்கப்
நிர்மலா மகாலிங்கம்

பாடல்வரிகள்
ஹசிம்
வைரபாரதி
மாதேஷ் சூர்யகுமார்

PRO
ஸ்ரீ வெங்கடேஷ்

Publicity Designer
G. தினேஷ் குமார்

Previous Post

ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஜோ’ இயக்குநர்

Next Post

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

Next Post

நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.