• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

by Tamil2daynews
May 24, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′ திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான ‘மாஸ்’ அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா ‘மெகா’ நிகழ்வாக  மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது … ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

பவன் கல்யாண் ‘கிளாப் போர்டு’ – ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் – கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி – இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

#ChiruBobby2- திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.  திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு- நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

நடிகர்கள் : ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து&  இயக்கம் : பாபி கொல்லி
தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா
தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்
இசை : எஸ். தமன்
திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி
கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி
வசனங்கள் – பானு & நந்து
நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

Previous Post

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – சக்திவாய்ந்த ஆக்ஷன் குடும்ப திரைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது; பின்னணி பணிகள் முழு வேகத்தில்!

Next Post

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 'சமவர்த்தி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.