• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

by Tamil2daynews
May 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

 

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்று, அந்த ஊரின் பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இவை அனைத்தும், ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜாத்தாரா திருவிழா கொண்டாட்டங்களின் போது, ஊரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் தங்கி, கிராம மக்களுடன் அன்பாக உரையாடி, விழாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உற்சாகத்தில் முழுமையாக கலந்து கொண்டார். அந்த அனுபவங்களையும், நினைவுகளையும், திருவிழாவின் கலாச்சார கொண்டாட்டத்தையும் பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பது, “என் அப்பா பிறந்த கிராமம் வேதுருபாகா. நாங்கள் சிறு வயதில் இருந்தபோது, சென்னையிலிருந்து அடிக்கடி எங்களை அழைத்து வந்து, இயற்கை அழகை உணரச் செய்த ஊர் இது. நம்முடைய மக்களுடனும் கலாச்சரத்துடனும்  இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள்  இந்த கிராமத்தில் அழகான வீடு கட்டியிருக்கிறோம்.
கலாச்சாரம், நாட்டுப்புறக் கலை மற்றும் தெய்வீகத்தின் அழகை எனக்கு கற்றுத்தந்த இந்த ஊர்தான் என்னை ‘எல்லம்மா’ படத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தது” என்றார்.

தனது சொந்த ஊர் மக்களுடன் தேவி ஸ்ரீ பிரசாத் கொண்டுள்ள ஆழமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்துவதோடு, அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘எல்லம்மா ‘ படத்தின் ஆன்மாவையும்  இது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

தில்ராஜு வழங்கும் இந்தப் படத்தை வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சிரீஷ் தயாரிக்கிறார். ‘எல்லம்மா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

Previous Post

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

Next Post

வாரண்ட் – விமர்சனம்

Next Post

வாரண்ட் - விமர்சனம்

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • “தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.