• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது

by Tamil2daynews
May 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது

 

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.

ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து மற்றும் பரபரப்பான இயக்கத்தில் உருவான இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை பெற்றது.

‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலதரப்பட்ட ரசிகர்களும் ஆர்வமுடன் கேட்டு வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
Image

வரும் வெள்ளிக்கிழமை மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘லீடர்’ திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது போன்றே ஓடிடியிலும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் தன் குழந்தைக்காக சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பாசமிகு தந்தையாக லெஜெண்ட் சரவணன் நடித்துள்ளார். பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக ஒடிடியை நோக்கி ‘லீடர்’ வந்துக் கொண்டிருக்கிறது.
Previous Post

தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் ‘அரசன்’

Next Post

‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

Next Post

‘கனவு கண்டேன்... சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.