• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

by Tamil2daynews
May 27, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி  ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
Ram Charan Will Win a National Award for Peddi and Audiences Will Be Amazed: Kannada Superstar Shiva Rajkumar - Chennai City Newsஇயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

Previous Post

‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

Next Post

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Next Post

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.