• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

by Tamil2daynews
May 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில்,சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த படத்தை அணுகியுள்ளார். படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் ‘சிக்மா’ திரைப்படத்தை கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்”.

நடிகர்கள்: சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: தமன் எஸ், ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்,
படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன்,
ஆடியோ உரிமம்: சரிகம நிறுவனம்,
டிஜிட்டல் உரிமம்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்
படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

Next Post

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

Next Post

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

Popular News

  • லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.