காட்டாளன் – விமர்சனம்

காட்டில் தந்தங்களை கடத்தும் கேங்ஸ்டர், சுனில் அவருக்கு இதுபோல் கதாபாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல, மாரியாக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் புஷ்பா பாதிப்பு ஹெவியாகவே உள்ளது.
நாயகன் ஆண்டனி பேச்சு மிக குறைவு ஆனால் செயல் அதிகம் என்பது போல் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டு என்பது போல் மாரியின் திட்டத்தை நிறைவேற்றி கொண்டே போகிறார், அதிலும் இடைவேளை காட்சி இறந்தவர்கள் உடலில் தந்தங்களை கடத்தும் காட்சி, போலிஸ் வந்ததும் வரும் டுவிஸ்ட் என கொஞ்சம் சுவாரஸ்யம்.

படத்தின் இரண்டாம் பாதி பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இருக்கும் என பார்த்தால் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர், வழக்கம் போல் வெறும் பில்டப், சண்டை என்றே படம் நகர்கிறது.
குறிப்பாக எமோஷ்னல் காட்சிகள் எதுமே படத்தில் அழுத்தமாக இல்லாதது பெரிய குறை, ஸ்டெண்ட் காட்சிகளில் கொடுத்த முக்கியத்துவம் திரைக்கதையில் இருந்திருக்கலாம்.
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், அதிலும் ஸ்டெண்ட் காட்சியில் மிரட்டியுள்ளனர் ஒவ்வொரு காட்சியமைப்பும், ரவி பசோர் இசை KGF-ல் கேட்டது போல் இருந்தால் ம் ஆங்காங்கே செம மாஸ் ஏற்றியுள்ளார்.
மொத்த படமும் புஷ்பா படத்தை ஞாபகப்படுத்தினாலும் திரைக்கதையிலும் சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பின் வேகம் நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கின்றது.









