• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

by Tamil2daynews
June 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ ( Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்களை வலுவாக சித்தரிக்கிறது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதை, பலரின் கவனத்திற்கே வராமல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.
இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,
“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

நடிகர்  ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,
“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”

நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,
“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி  விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி , ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.
Previous Post

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Next Post

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

Next Post

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

Popular News

  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0
  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.