• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமீதா பைஜு நடிக்கும் ‘ #PRS01’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

by Tamil2daynews
July 6, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமீதா பைஜு நடிக்கும் ‘ #PRS01’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

 

நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு  உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து –  தி ஆல்ஃபா
யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். தி ஆல்ஃபா யூனிட்  இயக்கத்தில் உருவாகும் #PRS01 திரைப்படத்தில் மமீதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ராகவ் மேற்கொள்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்த திரைப்படத்தை பி ஆர் ஷோ  நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி, தயாரிக்கிறார்.

தமிழ்- தெலுங்கு -மலையாளம் -ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் #பிஆர்எஸ்01 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் அறிமுக காணொளி- வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளிக்கான பின்னணி இசை-  முன்னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்றம் – கான்செப்ட் – ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் என்பதாலும், வுமன் சென்ட்ரிக் சப்ஜெக்ட் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

‘டிராகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் -‌அஸ்வத் மாரிமுத்து கூட்டணி இணைந்திருப்பதாலும்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தருணத்தில் அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
Previous Post

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Next Post

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

Next Post

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் 'ஜெயன்' அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.