‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.








