• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

by Tamil2daynews
October 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

 

பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ஒன்று. படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக இருக்கும் நிலையில், ’மரகத நாணயம்2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றது.  தனது கதாபாத்திர தேர்வின் மூலம் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆதிக்கும், இப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, ரசிகர்களும் திரையுலக வட்டாரமும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன், இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக்குழு விவரம்:
இசையமைப்பாளர் – திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவாளர்கள் – தீபக் மேனன் மற்றும் பி.வி. சங்கர்,
கலை இயக்குநர் – என்.கே. ராகுல்,
படத்தொகுப்பாளர் – திருமலை ராஜன் ஆர்.,
வசனகர்த்தா – ராஜேஷ் கண்ணன்,
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்

Previous Post

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

Next Post

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

Next Post

இயக்கமா...நடிப்பா...இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பில் அவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Dont Trouble The Trouble – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

October 3, 2026

அன்பில் அவன் – விமர்சனம்

October 3, 2026

சிக்மா – விமர்சனம்

October 3, 2026

Dont Trouble The Trouble – விமர்சனம்

October 3, 2026

“என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

October 3, 2026

இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

October 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.