சிக்மா – விமர்சனம்

சிக்மா – விமர்சனம் 

 

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் சிக்மா.

நாயகனின் அம்மா ஒரு புத்தகப்பைத்தியம். வீடு முழுக்கப் புத்தகங்களாக வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார். ஒரு லைப்ரரி போல அதை நடத்தி வருகிறார். நாயகனின் அப்பா ஒரு ஊதாரி. ஊர் முழுக்கக் கடனை வாங்கிக் குவித்து இருக்கிறார். மொத்தத்தில் நாயகனுக்கு ரூ. ஒன்றே கால் கோடி கடன் இருக்கிறது. உடனடி பணத்தேவையும் இருக்கிறது.

அம்மா, அப்பா மரணத்துக்குப்பின் நாயகன் தனியாகவே அந்தக் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடி. நாயகன் சொந்தமாக ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறான். ஆனால் அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை.

வில்லன் சொந்தமாக ஒரு தியேட்டர் வைத்திருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக சூதாட்ட கிளப் வைத்திருக்கிறான்.

இன்னொரு வில்லன் போதைப்பொருள் கடத்துபவன். இரண்டு வில்லன்களுக்கும் சொந்தமான 1000 கோடி ரூபாய் பணம் ஒரு இடத்தில் இருக்கிறது. அந்த சாவி எப்படியோ தவறுதலாக நாயகனிடம் வந்து சேர்கிறது. ஒரு பென் டிரைவும் கிடைக்கிறது. அந்த பென் டிரைவில் இருந்த விஷயம் என்ன? அதைத் தனக்கு சாதகமாக நாயகன் எப்படிப் பயன்படுத்திக் கொண்டான்?
யுவன் குரலில் சிக்மா படத்தின் லிரிக்கல் விடியோ! | Lyrical video of Jason Sanjay's 'Sigma' featuring Yuvan's vocals!

இதற்குப்பின் நாயகன், வில்லன்கள் இருவர் தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல்கள், துரத்தல்கள் தான் மீதித் திரைக்கதை.

நாயகனாக சந்தீப் கிசன் கச்சிதமாக நடித்திருக்கிறார். நாயகியாக பரீனா அப்துல்லா ரேடியோ ஜாக்கியாக அழகாக வந்து போகிறார். ஆனால் அதிக வாய்ப்பில்லை.

சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷிவ் பண்டிட் என மற்றவர்கள் நடிப்பும் ஓக்கே ரகம் தான்.

ஹாலிவுட்டில் வந்த பல ஹெய்ஸ்ட் திரில்லர் படங்களில் இருந்து காட்சிகளை உருவி இருக்கிறார்கள். சொந்த சரக்கு கொஞ்சம் கூட இல்லை.

நாயகியின் கேரக்டர் டிசைனில் முழுமை இல்லை. இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரு மணி நேரம் ஆள் அட்ரசே இல்லை.
சிக்மா: திரை விமர்சனம்

நாயகன் ஒவ்வொரு ஆக்சன் சீக்வன்ஸ் முடிந்ததும் ரத்தக்களறியாக அடிபட்டுக் கிடக்கிறார். ரியலிசமா சொல்றேன்னு நினைத்து ஹீரோயிசத்தில் டேமேஜ் பண்ணி விட்டார்கள்.

அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அரிவாள் எதுக்கு? என்ற பழமொழி மாதிரி இந்தக் கதையில் எதற்குத் தேவை இல்லாமல் ஒன்பது வில்லன்கள்?

புத்தக வாசிப்பே குறைந்து விட்ட சூழலில் லைப்ரரி வெச்சு வாழ்க்கை நடத்துவது எப்படி?

வில்லன் கேரக்டர் டிசைன் வலுவாக இருந்தால் தான் ஹீரோ எப்படி வில்லனை ஜெயிக்கப்போகிறார்? என்ற ஆவல் பிறக்கும். வில்லனே டம்மி எனில் எங்கே சுவராஸ்யம் வரும்?.

முதல் அரை மணி நேரத்தில் முழுக்கதையும் தெரிந்து விடுகிறது. எதிர்பார்ப்பு, பரபரப்பு, யூகிக்க முடியாத காட்சிகள், ட்விஸ்ட் அண்ட்ஸ் டர்ன்ஸ் எதுவும் இல்லை.

சிக்மா மொத்தத்தில் செய் கிக் மா.
Next Post

Recent News

error: Content is protected !!