• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

by Tamil2daynews
October 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

 

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கல்லூரி கலாட்டா, கலர்ஃபுல் விஷூவல்ஸ் மற்றும் காதல் என 145 விநாடிகள் நீளும் டிரெய்லர் கதையின் மையத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக மனோ வரும்போது நடைபெறும் எதிர்பாராத மற்றும் நகைச்சுவையான சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். கதாபாத்திரங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, நகைச்சுவை காட்சிகள் மற்றும் கதையின் உணர்வுப்பூர்வமான  தருணங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, இயல்பான நடிப்பாலும் திரை இருப்பாலும் இந்தப் படத்திலும் பார்வையாளர்களைக் கவர்கிறார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜ், தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் கதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் என முன்னணி கதாபாத்திரங்களின் எனர்ஜி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.‘ஹைக்கூ’ குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். ஆனால், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படம் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்கள் பலரது மத்தியில் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ திரைப்படமும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது. ஆனால், இந்தப் படம் எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை மேற்கொண்டுள்ளார். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

Next Post

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

Next Post

'ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.