• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை – மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்

by Tamil2daynews
December 22, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை – மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார்.
திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.
நடிகர் சந்தானம் ‘பேரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ். இவர், ‘வல்லினம்’ படத்தின் இயக்குநர் அறிவழகனிடம்  உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது. காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும்.
ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.
மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.
காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான ,ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.
ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படத்ததை பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
கும்பகோணத்தைத் தொடர்ந்து  ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.
Previous Post

பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி!

Next Post

“சாம் ஹொய்” (Sam Hoi ) வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார், இசையமைப்பாளர்  சாம் CS ! 

Next Post
“சாம் ஹொய்” (Sam Hoi ) வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார், இசையமைப்பாளர்  சாம் CS ! 

“சாம் ஹொய்” (Sam Hoi ) வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார், இசையமைப்பாளர்  சாம் CS ! 

Popular News

  • மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசாமில் கொட்டும் மழையில் மக்களுக்கு உதவிவரும் அபி சரவணன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!

    0 shares
    Share 0 Tweet 0
  • யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.