• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி !

by Tamil2daynews
March 31, 2021
in சினிமா செய்திகள்
0
தேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி !
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரது கவனம் குவித்த படமாக மாறியிருக்கிறது. அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  “தேன்” படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகை அபர்ணதி, அதீத பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். படத்தின் ஆத்மாவை நிலைநிறுத்தும் நடிப்பு எனறும் படத்திற்கான முதுகெலும்பாக அவரது நடிப்பு இருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
படத்தில் நடித்தது குறித்து, நடிகை அபர்ணதி பகிர்ந்துகொண்டதாவது…

“தேன்” படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான பாராட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களையே சேரும்.  இந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.  மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாக பிரதிபலிக்கும் பொருட்டு, படத்தின் போது ஷாம்பு, மேக்கப்  என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தான் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியில் இருந்த போது நான் அந்த பகுதி பெண்போலவே மாறினேன். படத்தின் பெரும்பகுதி கதை நடக்கும், ஜெயில் காட்சிகள் கண்ணகிநகரில் நடைபெற்றது. அதற்கு நேர்மாறாக படத்தின் மற்ற பகுதிகளை படம்பிடிக்க பல வித்தியாசமான இடங்களுக்கு பயணித்தோம். தேனியின் உட்புற மலைப்பகுதி கிராமங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தினோம். நாங்கள் படம்பிடித்த மலைப்பகுதி கிராமத்தில் வெறும் 28 குடும்பங்கள் மட்டுமே இருந்தது. எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லை. அங்கிருப்பவர்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும், 3 மணி நேரம் செலவழித்து 9 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். மேலும் சில காட்சிகளை தேனியில் ஒரு நிஜமான அரசு மருத்துவமனையில் நடத்தினோம். அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் மூணாறு பகுதிகளில் நடத்தினோம். மொத்தமாக 30 லிருந்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். மொத்த படப்பிடிப்பும் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.  நடிப்பு திறமையை வெளிப்படுத்தும்  சவாலான  பாத்திரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. படம்  உலகம் முழுக்க நிறைய திரைவிழாக்களில் கலந்துகொண்டு 48 விருதுகள் வரை வென்றுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும் விமரசகர்களும் என் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டி தேசிய விருது கிடைக்கும் என கூறியிருப்பது பெரும் ஆசிர்வாதம்.


அபர்ணதி தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில், Big Print Pictures , IB கார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக தேர்தலுக்கு பிறகு தொடங்கவுள்ளது. மேலும் அவருக்கு தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களிலிருந்தும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
Previous Post

‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்

Next Post

சுல்தானிலும் எடுபடுமா கார்த்தியின் ‘நம்பர்’ செண்டிமெண்ட்..?

Next Post
சுல்தானிலும் எடுபடுமா கார்த்தியின் ‘நம்பர்’ செண்டிமெண்ட்..?

சுல்தானிலும் எடுபடுமா கார்த்தியின் 'நம்பர்' செண்டிமெண்ட்..?

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.