• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை அனுஷ்கா..!

by Tamil2daynews
August 15, 2020
in சினிமா செய்திகள்
0
தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை அனுஷ்கா..!
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை அனுஷ்கா தமிழில் முன்னணி இயக்குனர் கம் ஹீரோவுடன் ஜோடி போட மறுத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல், உலக சினிமாவில் கதை பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இதனால், ஏற்கனவே ஹிட் ஆன படங்களின் பார்ட் 2, பார்ட் 3 என வண்டியை ஓட்டி வருகிறார்கள்.
இதில், பழைய படங்களை ரீமேக் செய்வது இன்னொரு வகை. அந்த வகையில், கடந்த, 1983-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.
37  ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிக்க உள்ளார். பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார்.
இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளது படக்குழு. ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என மறுத்துவிட்டாராம்.
திருமணம் செய்யவிருப்பதால் புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் அனுஷ்கா. ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதால் தான் மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். இதனால், இவர் மறுத்த அந்த வேடத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் என நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post

Actress Riya Suman Stills

Next Post

இசைத்துறையில் ஓர் புதிய முயற்ச்சி..!

Next Post
இசைத்துறையில் ஓர் புதிய முயற்ச்சி..!

இசைத்துறையில் ஓர் புதிய முயற்ச்சி..!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.