• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்

by Tamil2daynews
December 12, 2019
in சினிமா செய்திகள்
0
கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்
2
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:-

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, ஜீது ஜோசப் இயக்குகிறார். அதைப்பற்றி கதாபாத்திரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ப முக்கியத்துவமும், தொடர்பும் கொடுக்கப்பட்டிருக்கும். என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன். அது வரை காத்திருப்பேன்.

‘கிடாரி’க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது அதில் நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும் படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ‘தம்பி’ படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.

எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.

சில நடிகர்களுக்கு ஒரே பணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையான நடித்து வெளிப்படுத்துவார். இதுபோன்ற நடிகருடன் நினைப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்துக் கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

எல்லோரையும் போல் சூர்யா ஜோதிகா நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்குறது.

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், அட்டவணைப்படி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். தமிழ் படத்தில் நடித்த அனுபவத்தில் இப்படம் விரைவாகவே முடிவடைந்திருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுதவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ’96’ மற்றும் ‘அசுரவதம்’ படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையை பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறோம். மேலும், ‘கிடாரி’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தொடர் தமிழ் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபங்களைப் பற்றி கூறினார்.

Tags: Jeethu JosephJyotikaKarthiNikita VimalTamil MovieThambi
Previous Post

காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!

Next Post

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’

Next Post
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் 'பஞ்சராக்ஷ்ரம்'

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.