• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Beyond Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..!

by Tamil2daynews
January 11, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Beyond Pictures  நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..!

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும்  உற்சாகத்துடனும்  கொண்டாடினர்;  அதே உற்சாகத்துடன் திரைக்கு கொண்டு வருவதிலும் மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர்.

Beyond Pictures நிறுவனத்திற்காக ஜெயவர்தன் தயாரித்துள்ள இந்தப் படம், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும் (Production No.1). அது அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், நம்பிக்கை, மென்மையான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய தருணங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நேரப்படி.. குறித்த காலப் படி..  படப்பிடிப்பு சீரும் சிறப்புமாக நிறைவடைந்தது. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் அவர்களின் ஒத்துழைப்புக்கு இயக்குநர் தனது நன்றியை தெரிவித்தார். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நேர்மறை எண்ணங்களால் நிரம்பியிருந்ததாகவும், அது கதையின் ஆன்மாவையே பிரதிபலித்ததாகவும் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற முக்கியமான கதாப் பாத்திரத்தில் நடித்து, இளமை, புத்துணர்ச்சி மற்றும் அழகாக திரைநடையை வழங்கியுள்ளார். கதையின் உணர்ச்சி ஆழத்துக்கும் சூட்டிற்கும் ஏற்ப ஸ்ரீ கௌரி பிரியா தனது நடிப்பால் வலு சேர்த்திருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பவும் என்ட்ரி கொடுக்கும் எவர்கிரீன் நடிகர் அப்பாஸ் இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பதுடன், அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் இணைந்து, படத்தின் உயிரோட்டமான கதைக்களத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

மரியா  இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் ஆர்.கே. செல்வா, கலை இயக்குநர் குமார் கங்கப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO கவனித்து வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ தற்போது போஸ்ட் புரொடக்ஷன்  பணிகளுக்குத் தயாராகி வருகிறது. ப்ரோமோவுக்கு  கிடைத்த உற்சாகமான வரவேற்பும், படப்பிடிப்புக் காலத்தில் நிலவிய நேர்மறை எண்ணங்களும் இணைந்து, இந்த படம் பார்வையாளர்களுக்கு புன்னகை, சிரிப்பு மற்றும் மனதைக் கவரும் தருணங்களை வழங்கும் ஒரு புத்துணர்ச்சியான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

Next Post

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் முன்னோட்டம்

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.