• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials உடைய முதல் தமிழ் தொடரான  ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டது. மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா  முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது.  ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள “பூமி” திரைப்படம், விண்வெளிக்கு செல்லும்  சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது.
படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது…..
“பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்,  அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம். இயக்குனர் லக்‌ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத்தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார்.  பொங்கல் பண்டிகையை ஒட்டி, எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் வகையில் கனகச்சிதமாக எடுக்கபட்ட படம். ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் திரைபயணத்தில் “பூமி” திரைப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இருக்கும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஒரு அற்புதமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. Disney + Hotstar VIP-ல் படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…
ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மண் கூட்டணியுடன் இது எனக்கு மூன்றாவது படமாகும். ஒவ்வொரு முறையும் லக்‌ஷ்மண் ஒரு கதையுடன் வரும்போது அது அவரது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.  ரோமியோ ஜூலியட், போகன், பூமி இவை ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட கதைதளங்களில் வித்தியாசமான கதைசொல்லல் கொண்டிருக்கும். அவரது கதை மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் இருப்பதால் அதை ஈடு செய்யுமளவு எனக்கு பெரும் சாவலை தரும். பூமி கதையை என்னிடம் கூறியபோது அதில் இசைக்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்தேன். படத்தின் இறுதி வடிவத்தை கண்டேன் இப்படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொங்கல் விருந்தாக இருக்கும்
நாயகி நித்தி அகர்வால் கூறியதாவது…
வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக  போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது. ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு பாத்திரம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஜெயம் ரவி மிகவும் அன்பானவர் சேர்ந்து நடிக்கும் போது மிகவும் ஆதராவாக இருந்தார். அவரது அர்ப்பணிப்பும் சினிமா மீதான அபரிமிதமான காதலும் தான் மக்களிடம் அவருக்கு இத்தனை அன்பை பெற்று தந்துள்ளது. அவரது 25 வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மன். இது 100 % குடும்பங்கள் கொண்டாடும் படம். Disney + Hotstar VIP இப்படத்தினை பொங்கல் திருநாளன்று அனைத்து வீடுகளுக்கும் விருந்தாக கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி
மிகவும் அழுத்தமான கதை கொண்ட இப்படம் மிக பிரமாண்டமான நடிகர் குழுவை கொண்டுள்ளது. நடிகர் ரோனித் ராய் எதிர்மறைதன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்க அவருடன் சதிஷ், தம்பி ராமையா, தத்தோ ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படம் உழவர்களின் கொண்டாட்ட பண்டிகை சமயத்தில்,  பொங்கல் திருநாளில் 14 ஜனவரி 2021 அன்று Disney + Hotstar VIP வெளியாகிறது.
Previous Post

“கபடதாரி” விரைவில் திரையில் ! 

Next Post

பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 

Next Post
பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 

பாராட்டுக்களை குவிக்கும் “மாறா” படத்தின் கலை இயக்கம் ! 

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.