• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ஆங்கிலம் மற்றும் இந்தியில்  பா.இரஞ்சித் தயாரிக்கும் “பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்”

by admin
March 6, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ஆங்கிலம் மற்றும் இந்தியில்  பா.இரஞ்சித் தயாரிக்கும் “பி.ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும்”
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குனர் பா.இரஞ்சித்  திரைப்படங்களை இயக்குவதோடு  தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில்  “பரியேறும் பெருமாள்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” என்கிற படத்தை தயாரித்து வருகிறது இவருடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம்.
இந்நிலையில் மும்பையைசேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜோதி நிஷா-வுடன் கைகோர்க்கிறது “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம்.
“பி.ஆர் அம்பேத்கர் – இன்றும் நாளையும்”
 என்கிற இந்த ஆவணப் படத்தை இயக்குநர் ஜோதி நிஷாவுடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த ஆவணப் படத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள்,  இந்திய அரசியலில் சாதி நிறுவனமாக்கப்பட்டது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை ஆகியவை உள்ளிட்ட பலவற்றை ஆவணப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், பேரணிகள், ஹார்வேர்டு பல்கலைக் கழக பேராசிரியர்களின் பேட்டிகள், தலித் அரசியல் களத்தில் இயங்கும் படைப்பாளிகளின் பேட்டிகள் என பல வருடங்களாக தான் சேகரித்து வைத்தவற்றை எல்லாம் இந்த ஆவணப் படத்தில் இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி நிஷா.
இந்த ஆவணப் படம் குறித்து அவர் கூறுகையில்,
“இந்திய இலக்கியங்கள் மற்றும் சினிமாவில் நாயக கண்ணோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவற்றை இதில் ஆவணப் படுத்த இருக்கிறோம். குறிப்பாக வெகுஜன ஊடகங்கள் பேச மறுத்த வரலாறுகளை பதிவு செய்கிறோம். சமூக அரசியல் சூழல் மாறியிருக்கும் இந்நேரத்தில் “பி.ஆர் அம்பேத்கர் – இன்றும் நாளையும்” ஆவணப்படம் பெண்ணிய நிலைப்பாட்டில் இருந்து சமூகப் புரட்சியையும், பெரும்பான்மை மக்களின் வாழ்விடம் மற்றும் பார்வை குறித்தும் பேச இருக்கிறோம்” என்றார்.
“இந்த ஆவணப்படம் நிச்சயம் வரலாற்றை எழுதும், இதில் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது
“பி ஆர் அம்பேத்கர் இன்றும் நாளையும் ” ஆவணப்படம்.
Tags: BRAmbedkarNowAndThen
Previous Post

தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !!

Next Post

மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

Next Post
மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

மக்கள் சேவகர் என்ற பட்டத்தை ஆரிக்கு வழங்கியது DR.R.K.S கல்லூரி

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்

    4 shares
    Share 4 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.