• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!

by Tamil2daynews
April 23, 2021
in செய்திகள்
0
கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!
தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த சந்தேகங்களை தனது கருத்துரிமை மூலம் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் கரடுமுரடாக இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய சந்தேகங்கள் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான்.
                                                                          
இந்நிலையில், பாஜகவினர் சிலர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையை நசுக்கும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது.
நடிகர் விவேக் அவர்களை பொறுத்தவரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே ஊசி போட்டுக் கொண்டார். ஆனால், அதன் பிறகான அவரின் உடனடி மரணம் அவரின் விழிப்புணர்வுக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. அவரின் மரணம் தொடர்பாக அரசு தரப்பில் என்னதான் விளக்கம் கொடுத்தாலும்  பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்துக்கு உரிய முறையில் விடை கிடைக்கவில்லை.
நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை அதற்குரிய வகையில் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக தெரிவித்தவரை வழக்கு கைது என மிரட்டுவது ஏற்புடையதல்ல. இத்தகைய போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனி யாரும் தங்களது கருத்தை வெளிப்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுவிடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை கண்காணிக்கும் கமிட்டியான AEFI எனப்படும் Adverse Events Following Immunization  தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நாட்களுக்குள் எந்த ஒரு மனிதருக்கும் ஏற்படும் உடல் உபாதைகள், உடலில் தோன்றும் மாற்றங்கள் அல்லது மரணங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிறது. இந்தியாவில் 30 நாட்கள் என்பது 14 நாட்களாக்கப்பட்டுள்ளது. அந்த 14 நாட்களில் தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகளையாவது பதிவு செய்ய வேண்டும்.
தடுப்பூசி பாதகங்களை சரியான ஆவணங்களுடன், மரணம் என்றால் உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது பிரேத பரிசோதனை முதல் இரத்த பரிசோதனை, தசை மாதிரி பிரசோதனை என பல்வேறு ஆய்வு முடிவுகளுடன் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு, மாவட்ட, மாநில, மத்திய அளவிலான கமிட்டிகள் இவற்றை அடுத்தடுத்து முறையாக பரிசீலித்து  வகைப்படுத்துவர். இது அனைத்து வகையான தடுப்பூசிக்கும் பொருத்தும். 2020 டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம்  இதுபற்றி விவரமான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.
ஆனால், இத்தகைய வழிமுறைகள் எதையும் நடிகர் விவேக்கின் மரண விவகாரத்தில் பின்பற்றாமல் அது தொடர்பாக சந்தேகங்களை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.
ஆகவே கோடிக்கணக்கான மக்களின் சந்தேகத்தை தனது குரலின் மூலம் வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களை அடக்குமுறையில் அல்லாது அறிவியல் பூர்வமாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி அரசு தீர்க்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Previous Post

*இனி நான் ‘பேபி’ நயன்தாரா அல்ல.. மிஸ்.நயன்தாரா சக்ரவர்த்தி!* *ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம்.* 

Next Post

அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள்!

Next Post
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள்!

அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள்!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.