ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரசியலை அலசும் “கட்சிக்காரன்”

by Tamil2daynews
November 30, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
193
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அரசியலை அலசும் “கட்சிக்காரன்”

 

‘கட்சிக்காரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிப் பலதரப்பட்ட வகையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் சரசரவென பரவி வருகிறது விறுவிறுப்பு.அந்த அளவிற்கு அதில் உள்ள வசனங்கள் பரபரப்பாகி வருகின்றன.’தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக ‘கட்சிக்காரன் ‘படத்தை இயக்கி உள்ளார்.பி.எஸ். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன.தயாரிப்பு சரவணன் செல்வராஜ்,இணைத் தயாரிப்பு  மலர்க்கொடி முருகன்.

ஒரு கட்சித் தொண்டன் என்பவன் விசுவாசிதானே தவிர அடிமை அல்ல.அன்புக்காக வந்து நிற்பான். ஆனால் உரிமைக்காகக் குரல் கொடுப்பவன் என்கிற ரீதியில் இந்தப் படம் உருவாகி உள்ளது.தொண்டர்களைக் கட்சித் தலைவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அவர்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதைப் பற்றிக் கூறுகிறது இந்தப் படம்.ட்ரெய்லரில் இடம்பெறும் சில வசனங்கள் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
”நாட்டுக்குள்ள எந்த கட்சியுமே சரியில்ல .எல்லா கட்சியுமே கோடி கோடியா பணத்தை அடிக்கிறதுலதான் குறிக்கோளா இருக்காங்க.அதனால மக்களுக்கு நல்லது பண்ற மாதிரி ஒரு நல்ல கட்சியை கண்டுபிடித்து அனுப்பி வைடா ஆண்டவா “”உங்கள மாதிரி ஒரே கட்சிக்கு உழைச்சு ஓட்டாண்டியாக நான் தயாரில்லை. அதுக்கு நானே ஒரு கட்சி ஆரம்பிச்சு தொண்ட கிழிய கத்தி, காசு கொடுத்து ஓட்டு வாங்கிட்டு முதலமைச்சர் ஆயிட்டு மூட்ட மூட்டையா கொள்ள அடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்” “கூட்டணிக்காக கூட்டி கொடுப்பியாடா நீ?”

“இந்தக் கட்சியில கூட்டணி வச்சா அந்த கட்சிக்காரன் ஏசுவான். அந்தக் கட்சியில கூட்டணி வச்சா இந்தக் கட்சிக்காரன் ஏசுவான். மக்கள் வேற காறித் துப்புவாங்க.கூட்டணி வச்சு பெட்டி வாங்குறத சாதாரண விஷயமா நினைக்கிறியா நீ?”

“எந்தத் தலைவன் சொந்த காசு செலவு பண்றான்? மனுத் தாக்கல் செய்யும்போது ஆயிரம் கோடி சொத்து இருக்கும் .ஆனா ஒரே ஒரு கார் இருக்கும்பான்.எல்லாத்தையும் பொண்டாட்டி பேர்ல வச்சுட்டு, பொய் சொல்லுவான் .அவனுக்கும் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு தான் இருக்காங்க.”

“அவங்க கொடுக்கும் குடத்துக்கும் குவார்ட்டருக்கும் நம்பி நல்லவங்கன்னு நினைச்சு ஓட்டு போடறோம். அவங்க நம்ம கிட்ட பல கோடி ஆட்டைய போட்டு  பணக்காரனாயிடுறாங்க”
“இப்ப இருக்கிற நிலைமையில ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைன்னா எம்ஜிஆரே இருந்தாலும் ஜெயிக்க முடியாது” இப்படியாகப்பட்ட வசனங்கள் சில நிமிட ட்ரெய்லரில் இடம்பெற்று பரபரப்பூட்டி  வருகின்றன.

இப்படத்தில் விஜித் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவர் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் நடித்தவர்.
ஸ்வேதா டாரதி கதாநாயகி.

”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில்  வில்லனாக நடித்த சிவசேனாதிபதி அரசியல் தலைவராகவும் காமெடியனாக AR தெனாலி, அப்புக்குட்டி,  அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன், நாசரின் தம்பி  ஜவகர் ,விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட் ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- மதன்குமார்,எடிட்டிங் . யு கார்த்திகேயன்,இசை -ரோஷன் ஜோசப் பின்னணி இசை-C. M. மகேந்திரா  ,பாடல்கள் நா. ராசா,பாடகர்கள் ஹரிச்சரண்,
வேல்முருகன்.

டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள பரபரப்பால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Previous Post

எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!

Next Post

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!

Next Post

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • ரசிகர்களை மகிழ்விக்க வரும் “லைகர்” நடிகர் விஷ் ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இலக்கணப்பிழை திருநங்கை பாடல்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!